பொது செய்தி

இந்தியா

எம்.பி.பி.எஸ்., ஆயுர்வேத படிப்புகளுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வில் ஒதுக்கீடு

Added : ஜன 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி; இரண்டாம் கட்ட கணினி கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேத படிப்புகளில் இடம் கிடைத்த மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு விடுத்துள்ள செய்திக் குறிப்பு:நீட் மதிப்பெண் அடிப்படையிலான எம்.பி.பி.எஸ்.,பல் மருத்துவம், ஆயுர்வேத படிப்புகளில் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் அரசு ஒதுக்கீடு, நிர்வாக

புதுச்சேரி; இரண்டாம் கட்ட கணினி கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேத படிப்புகளில் இடம் கிடைத்த மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு விடுத்துள்ள செய்திக் குறிப்பு:நீட் மதிப்பெண் அடிப்படையிலான எம்.பி.பி.எஸ்.,பல் மருத்துவம், ஆயுர்வேத படிப்புகளில் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, என்.ஆர்.ஐ., பிரிவில் இடம் கிடைத்த மருத்துவ மாணவர்களின் பட்டியல் www.centacpuducherry.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இடம் கிடைத்த மருத்துவ மாணவர்கள் வரும் 11ம் தேதிக்குள் சேர்க்கை பெற்ற கல்லுாரியில் சேர வேண்டும்.அரசு பல் மருத்துவ கல்லுாரியில் 40 பி.டி.எஸ்., இடங்களை 50 ஆக உயர்த்த தேசிய பல் மருத்துவ கவுன்சில் ஒப்புதலுக்காக கல்லுாரி விண்ணப்பித்துள்ளது. இக்கல்லுாரியில் உயர்த்தப்பட்ட இடங்கள் 'மாப் அப்' கவுன்சிலிங்கில் நிரப்பப்படும்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X