வில்லியனுார்; மாநிலத்தின் பெரிய ஏரியான ஊசுடேரி 5 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவு எட்டியதால் பத்துக்கண்ணு மதகு திறந்து உபரி நீரை ஆற்றிற்கு திருப்பி விட்டனர்.நிவர் மற்றும் புரெவி புயலில் பெய்ந்த தொடர் கனமழை மற்றும் வீடுர் அணை திறப்பால் ஊசுடேரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. கடந்த ஐந்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஊசுடேரி முழு கொள்ளவை எட்டியது. முழு கொள்ளவான 3.5 மீட்டர் அளவுடன் நீர் நிரம்பிய நிலையில் ஊடேரி கடல் போன்று காட்சியளிக்கிறது.சில தினங்களாக பெய்யும் மழையால் ஏற்கனவே முழு கொள்ளவுடன் உள்ள ஊசுடேரிக்கு உபரி நீர் வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்ட செயற் பொறியாளர் உத்தரவின்பேரில் இளநிலைப் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று காலை பத்துக் கண்ணு பகுதியில் மீண்டும் மதகு திறந்து சங்கராபரணி ஆற்றிற்கு உபரி நீரை வெளியேற்றினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE