பொறியாளர் அலுவலகம் எதிரே வவுச்சர் ஊழியர்கள் போராட்டம்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி; தலைமை பொறியாளர் அலுவலகம் எதிரே வவுச்சர் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி பொதுப்பணித் துறையில் கடந்த 2010 ம் ஆண்டு முதல் 1311 வவுச்சர்கள் ஊழியர்கள் பணி புரிகின்றனர். இவர்களுக்கு தினசரி ரூ. 200 ஊதியமும் 16 நாட்கள் பணியும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாதம் ரூ. 3200 சம்பளம் பெற்று வருகின்றனர். பத்து ஆண்டுகள் பணி முடித்த தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி

புதுச்சேரி; தலைமை பொறியாளர் அலுவலகம் எதிரே வவுச்சர் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி பொதுப்பணித் துறையில் கடந்த 2010 ம் ஆண்டு முதல் 1311 வவுச்சர்கள் ஊழியர்கள் பணி புரிகின்றனர். இவர்களுக்கு தினசரி ரூ. 200 ஊதியமும் 16 நாட்கள் பணியும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாதம் ரூ. 3200 சம்பளம் பெற்று வருகின்றனர். பத்து ஆண்டுகள் பணி முடித்த தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஒன்பதாவது நாளாக நேற்று தலைமை பொறியாளர் அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தினர். அரசு பணியாளர் நல கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது பொதுப்பணித் துறை ஊழியர்களுக்கு 16 நாள் வேலையை 26 நாட்களாக உயர்த்தி சம்பளம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச கூலியை ரூ. 600 ஆக உயர்த்த வேண்டும். வவுச்சர் ஊழியர்களுக்கு ஊதியத்தை சீர்ப்படுத்தி கருவூலம் மூலமாக மாதம் முதல் தேதியில் சம்பளம் வழங்க வேண்டும். 1311 வவுச்சர் ஊழியர்களையும் சீனியாரிட்டி வரையறை செய்து, முழு நேர தினக்கூலிகளாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X