புதுச்சேரி; புதுச்சேரி முன்னாள் ராணுவ வீரர்கள் லீக் சார்பில் முப்படை நலவாரிய இயக்குனரை கண்டித்து சுதேசி காட்டன் மில் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு, லீக் தலைவர் மோகன் தலைமை தாங்கினார். 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் வீரத் தாய்மார்கள் கலந்து கொண்டனர்.இதில், கடந்த 5 ஆண்டுகளாக முப்படை நலவாரிய அலுவலகத்திற்கே வராமல் செயல்படும் இயக்குனரை நீக்கி விட்டு, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை உடனடியாக நியமிக்க வேண்டும். கொரோனா நிவாரண நிதி ரூ. 1000 உடனே வழங்க வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்கள் இறந்தால், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 ம் தேதி கொடி நாள் விழாவை தவறாமல் நடத்த வேண்டும். தகுதி வாய்ந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE