பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி திறக்க பெற்றோர் எதிர்பார்ப்பு

Added : ஜன 08, 2021
Share
Advertisement
பொங்கல் விடுமுறைக்கு பின் பள்ளிகளை திறப்பது குறித்து, அந்தந்த பள்ளிகளில், பெற்றோர் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.கும்மிடிப்பூண்டி அரசினர்மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் முன்னிலையில், பெற்றோர் கருத்து கேட்பு கூட்டம், நேற்று நடைபெற்றது.பத்தாம் மற்றும் பிளஸ் 2, மாணவியரின் பெற்றோர் பங்கேற்றனர். அப்போது, குழந்தைகளின்
 பள்ளி திறக்க பெற்றோர் எதிர்பார்ப்பு

பொங்கல் விடுமுறைக்கு பின் பள்ளிகளை திறப்பது குறித்து, அந்தந்த பள்ளிகளில், பெற்றோர் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.கும்மிடிப்பூண்டி அரசினர்மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் முன்னிலையில், பெற்றோர் கருத்து கேட்பு கூட்டம், நேற்று நடைபெற்றது.பத்தாம் மற்றும் பிளஸ் 2, மாணவியரின் பெற்றோர் பங்கேற்றனர். அப்போது, குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் பாதிக்காமல் இருக்க, உடனடியாக பள்ளியை திறக்க வேண்டும் என, பெற்றோர் கருத்து தெரிவித்தனர்.ஒரு சிலரை தவிர, மற்ற அனைத்து பெற்றோரும், பள்ளியை திறக்க வேண்டும் என தெரிவித்தனர்.திருத்தணி: திருத்தணி அரசினர் மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு, தலைமை ஆசிரியர்கள் பாலசுப்ரமணியம், தெமினா கிரோனப் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், 100க்கும் மேற்பட்ட பெற்றோர் பங்கேற்றனர்.பிற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதே போல், இனியும் தாமதம் செய்யாமல், அரசு பள்ளிகள் திறந்து மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என, தெரிவித்தனர்.கடம்பத்துார்: கடம்பத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்த கூட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2ல், 300 மாணவர்களில், 27 மாணவர்களின் பெற்றோர் மட்டுமே பங்கேற்றனர். இதில், 18 பெற்றோர், பள்ளிகளை திறக்க வேண்டும் என, கருத்து தெரிவித்துள்ளனர்.கருத்து கேட்பு கூட்டத்தில், 100க்கும் மேற்பட்ட பெற்றோர் பங்கேற்காதது, அதிர்ச்சியாக இருப்பதாக, ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.இதேபோல், மேல்நல்லாத்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், 61 மாணவர்களின் பெற்றோரில், 34 பேர் மட்டுமே பங்கேற்றனர். பல அரசு பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டத்தில் பெற்றோர் பங்கேற்கவில்லை
-- நமது நிருபர் குழு -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X