திருவள்ளூர்; திருவள்ளூர் மாவட்டத்தில், இரண்டு நாட்களாக விடாது மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் பெரியகுப்பம், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் பின்புறம், பூங்கா நகர், ராஜாஜிபுரம், காக்களூர் என, நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், தாழ்வான பகுதியில், மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளது.சாலைகளில் தேங்கிய மழை நீரால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள், வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல், கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக, தேவா நகர் பகுதியில், புட்லுார் ஏரியில்இருந்து வெளியேறும்மழை நீர் சாலையில் தேங்கி உள்ளது. ஜே.என்.சாலை, நேதாஜி சாலை, ஜவஹர் நகர் உள்ளிட்ட பகுதிகளில், சாலையில் தேங்கிய மழை நீரால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக, பூந்தமல்லியில், 10 செ.மீ., குறைந்தபட்சமாக, சோழவரத்தில்,0.8 செ.மீ., மழை பதிவாகியது.மழையளவு விபரம் (செ.மீட்டரில்)இடம் மழையளவுபூந்தமல்லி 10.3பூண்டி 6.6திருவள்ளூர் 4.5ஜமீன் கொரட்டூர் 3.9திருவாலங்காடு 3.5பள்ளிப்பட்டு 3.5திருத்தணி 3.2ஊத்துக்கோட்டை 2.4கும்மிடிப்பூண்டி 2.1பொன்னேரி 1.9தாமரைப்பாக்கம் 1.1செங்குன்றம் 0.8சோழவரம் 0.8
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE