பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
பஸ் ஊழியர்கள் போராட்டம்காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில், அரசு போக்குவரத்து கழக எதிர்க்கட்சி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், காத்திருப்பு போராட்டம், நேற்று நடந்தது.இதில், 2019ம் ஆண்டிற்கான ஊதிய ஒப்பந்த பேச்சு உடனடியாக துவங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம்

பஸ் ஊழியர்கள் போராட்டம்காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில், அரசு போக்குவரத்து கழக எதிர்க்கட்சி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், காத்திருப்பு போராட்டம், நேற்று நடந்தது.இதில், 2019ம் ஆண்டிற்கான ஊதிய ஒப்பந்த பேச்சு உடனடியாக துவங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பப்பட்டது.வேளாண் துறையில் பணி இடம் ஒதுக்கீடுகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், வேளாண் விற்பனை துறையில் 39 வேளாண் உதவி அலுவலர் பணியிடங்கள் உள்ளன.இதில், ஒரு சில ஒன்றியம் மற்றும் உழவர் சந்தை பகுதிகளில், வேளாண் உதவி அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக இருந்தன. அதை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், ஒன்பது பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு உள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில், கூடுதலாக இருந்த சில பணியிடங்கள் குறைக்கப்பட்டு உள்ளன என, வேளாண் விற்பனை துறையினர் தெரிவித்தனர்.தொண்டருக்கு காலண்டர் 'சப்ளை'மாமல்லபுரம்: ஆங்கில புத்தாண்டு துவங்கி, காலண்டர் பயன்பாடும் முக்கியத்துவம் பெறுகிறது. அனைத்து தரப்பினரும், இதை பயன்படுத்துகின்றனர். பொதுவாக, சிலரே, சொந்த செலவில், காலண்டர் வாங்குகின்றனர். பெரும்பாலும், வர்த்தக, தொழில் நிறுவனங்கள், பொதுமக்களுக்கு, இலவச காலண்டர் வழங்குகின்றன.இது ஒருபுறமிருக்க, அரசியல் பிரமுகர்களும், தொண்டர், பொதுமக்களுக்கு, இலவச காலண்டர் வழங்குகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள், தற்போது, மக்களுக்கு இலவச காலண்டர் வழங்குகின்றனர்.விண்ணப்பம் வரவேற்புதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், 'தாட்கோ' மூலம் பொருளாதார மேம்பாட்டு திட்டத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.வயது வரம்பு, 18 - 65. இதன் மூலம், நிலம் மேம்பாடு, மின் இணைப்பு, கிணறு அமைத்தல், தொழில்முனைவோர் உள்ளிட்ட திட்டங்களுக்கு, உதவி செய்யப்படுகிறது.விண்ணப்பதாரர்கள், http://application.tahdco.com என்ற இணையதளம் வாயிலாக, உரிய ஆவணங்களுடன், விண்ணப்பித்து பயன் பெறுமாறு, கலெக்டர் பொன்னையா கேட்டுக் கொண்டுள்ளார்.கல்வி உதவித்தொகைதிருவள்ளூர்: பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ம்., ஐ.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும், தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவ - மாணவியருக்கு, 2020 - -21ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.குடும்ப ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ள, மாணவ - மாணவியர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் விண்ணப்பத்தை பெற்று, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில், பிப்., 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, கலெக்டர் பொன்னையா கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X