ஓ.எம்.ஆரில், டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் சந்திப்பில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 108 கோடி ரூபாயில் இரண்டு, 'யு' வடிவ மேம்பாலங்கள் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
சென்னையின் மிக முக்கிய சாலையாக, ஓ.எம்.ஆர்., உள்ளது. ஐ.டி., நிறுவனங்கள் அதிகமாக உள்ளதால், ௨௪ மணி நேரமும், இந்த சாலையில் நெரிசல் இருக்கும்.இச்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, டைடல் பார்க் சிக்னல் மற்றும் இந்திரா நகர் சிக்னல் ஆகிய இடத்தில், 'யு' வடிவில், மேம்பாலம் அமைக்க, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் திட்டமிட்டது.இதற்காக, 108 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கட்டுமான பணிக்காக, 'பில்லர்' அமைக்கும் பணி, தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேம்பாலம் அமைக்க இடையூறாக நின்ற, 35 மரங்களை, வேரோடு பிடுங்கி, தரமணி, மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் சமீபத்தில் நடப்பட்டது.
டைடல் பார்க் சந்திப்பில், மத்திய கைலாஷ் மற்றும் திருவான்மியூரில் இருந்து, சி.எஸ்.ஐ.ஆர்., சாலை வரை, 2,000 அடி நீளம், 30 - -40 அடி அகலத்தில் ஒரு பாலம் அமைய உள்ளது.மேலும், மத்திய கைலாஷில் இருந்து, டைடல் பார்க் சிக்னலில், 'யு' டர்ன் செய்து, மீண்டும், மத்திய கைலாஷ் நோக்கி திரும்பும் வகையில், 1,000 அடி நீளம், 30 அடி அகலத்தில், மேம்பாலம் அமைய உள்ளது. இரு பாலமும், ஒன்றோடு ஒன்று இணைத்து கட்டப்படுகிறது.அதேபோல், இந்திரா நகர் சிக்னல் அருகில், 1,000 அடி நீளம், 30 அடி அகலத்தில், மற்றொரு, 'யு' வடிவ மேம்பாலம் கட்டப்பட உள்ளது.மேம்பாலம் பணி முடிந்ததும், இந்திரா நகர் சிக்னல் மூடப்படும். இரண்டு மேம்பால பணிகள் முடிந்ததும், டைடல் பார்க், இந்திரா நகர் சந்திப்பில், கணிசமாக நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியானதால், மேம்பால பணிகள் முடிய, மூன்று ஆண்டுகள் வரை ஆகும் என, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் கூறினர்.2020 நவம்பர், ஓ.எம்.ஆர்., டைடல் பார்க் அருகே, போக்குவரத்து போலீசார் கணக்கெடுப்பு நடத்தினர்.வழக்கத்தை காட்டிலும், கொரோனா பாதிப்பால், 40 சதவீதம் வாகன போக்குவரத்து குறைந்திருந்தது. அது குறித்த விபரம்:வாகனம் சோழிங்கநல்லுார் நோக்கி மத்திய கைலாஷ் நோக்கி காலை 8 முதல் 11 வரை காலை 8 முதல் 11 வரை மாலை 5 முதல் 8 வரை மாலை 5 முதல் 8 வரைபைக் 7,626 7,003 8,182 7,999கார் 1,624 1,676 2,021 2,791ஆட்டோ 409 389 474 263வேன் 407 54 81 33 71அரசு பேருந்து 221 375 466 423 தனியார் பேருந்து 65 54 71 47 இதர 163 199 233 172300 சதவீதம் அதிகரிப்பு!டில்லிக்கு அடுத்தப்படியாக, சென்னையில், 55 லட்சம் வாகனங்கள் உள்ளன. இவற்றில், 78 சதவீதம் இருசக்கர வாகனங்கள். கடந்த, 15 ஆண்டுகளில், 300 சதவீதம் வாகனங்கள் அதிகரித்துள்ளன.
சென்னையில் உள்ள, 408 சிக்னல்களில், 100 சிக்னல்கள், முக்கிய சாலை சந்திப்பில் உள்ளன. ஓ.எம்.ஆரில், 19 சிக்னல்கள் உள்ளன. இங்கு, ஐ.டி., நிறுவனங்கள் அதிகம் உள்ளதால், வாகன நெரிசல் அதிகமுள்ள சாலையாக உள்ளது.ஓ.எம்.ஆரில், மூன்று இடங்களில் சுங்கச்சாவடி உள்ளது. மத்திய கைலாஷ், இந்திரா நகர், டைடல் பார்க், துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார் சிக்னல் சந்திப்புகளில், அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் கடப்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.நெரிசலை குறைத்து, பயண நேரத்தை மிச்சப்படுத்த, முக்கிய சிக்னல்களில் மேம்பாலம் அமைய உள்ளது. இதில், இந்திராநகர் போன்ற சில இடங்களில், மேம்பாலம் அமைத்து, சிக்னல்கள் அகற்றப்பட உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE