சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளருக்கு கத்திக்குத்து

Added : ஜன 08, 2021
Share
Advertisement
அமைந்தகரை - அமைந்தகரையில், வீட்டு வாடகை கேட்ட உரிமையாளரை, வாடகைதாரர் கத்தியால் குத்தியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சூளைமேடு, வன்னியர் முதல் தெருவைச் சேர்ந்தவர் அப்ரல் அகமது, 47; தனியார் நிறுவன ஊழியர். அமைந்தகரை, பாரதிபுரத்தில் உள்ள அவரது வீட்டை, கனகசுந்தரம், 65, என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி, கடந்த ஆறு மாதமாக, கனகசுந்தரம் வாடகை

அமைந்தகரை - அமைந்தகரையில், வீட்டு வாடகை கேட்ட உரிமையாளரை, வாடகைதாரர் கத்தியால் குத்தியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சூளைமேடு, வன்னியர் முதல் தெருவைச் சேர்ந்தவர் அப்ரல் அகமது, 47; தனியார் நிறுவன ஊழியர். அமைந்தகரை, பாரதிபுரத்தில் உள்ள அவரது வீட்டை, கனகசுந்தரம், 65, என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி, கடந்த ஆறு மாதமாக, கனகசுந்தரம் வாடகை செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம், கனகசுந்தரத்தை மொபைல் போனில் தொடர்பு கொண்ட அப்ரல் அகமது, வாடகை கேட்டுள்ளார். இதற்கு, வீட்டிற்கு வருமாறு கனகசுந்தரம் அழைப்பு விடுத்துஉள்ளார்.வீட்டிற்கு வந்த அப்ரல் அகமது மற்றும் கனகசுந்தரத்திடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியால், அப்ரலை கனகசுந்தரம் குத்தியுள்ளார்.இதில் படுகாயமடைந்த அப்ரலை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அமைந்தகரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X