பொது செய்தி

தமிழ்நாடு

பெண் துாய்மை பணியாளரின் உயிரை பறித்த மர்ம வாகனம்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
வளசரவாக்கம் - வளசரவாக்கத்தில், இரவு வேளையில் சாலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட பெண் துாய்மை பணியாளர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.மதுரவாயல், ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர், ரவணம்மா, 38. இவர், வளசரவாக்கம் மண்டலத்தில், ஒப்பந்த அடிப்படையில், கடந்த எட்டு ஆண்டுகளாக துாய்மை பணியாளராக இருந்தார்.நேற்று முன்தினம் இரவு, வளசரவாக்கம் - ஆற்காடு சாலையில், துாய்மை

வளசரவாக்கம் - வளசரவாக்கத்தில், இரவு வேளையில் சாலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட பெண் துாய்மை பணியாளர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.மதுரவாயல், ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர், ரவணம்மா, 38. இவர், வளசரவாக்கம் மண்டலத்தில், ஒப்பந்த அடிப்படையில், கடந்த எட்டு ஆண்டுகளாக துாய்மை பணியாளராக இருந்தார்.நேற்று முன்தினம் இரவு, வளசரவாக்கம் - ஆற்காடு சாலையில், துாய்மை பணியில் ஈடுபட்டார். அப்போது, வேகமாக வந்த லோடு ஆட்டோ, அவர் மீது மோதி, நிற்காமல் சென்றது.இதில், துாக்கி வீசப்பட்ட ரவணம்மா, சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த போலீசார், அவரது உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து, பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X