மணலி - போக்குவரத்து விதிமீறிய கன்டெய்னர் லாரிகளுக்கு, ஒரே நாளில், 2.26 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.சென்னை, மாதவரம், பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, மாதவரம் விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை, எண்ணுார் விரைவு சாலை வழியாக, கன்டெய்னர் லாரிகள், சென்னை துறைமுகம் நோக்கி செல்லும்.வரிசையில் நிற்காமல், விதிமீறி செல்லும் கன்டெய்னர் லாரிகளால், அடிக்கடி விபத்து, உயிரிழப்பு சம்பவங்கள் அரங்கேறின. டிசம்பர் இறுதியில், கன்டெய்னர் லாரிகள், விதிகளை கடைப்பிடிக்காமல், மொத்த சாலையையும் அடைத்ததால், போக்குவரத்து முடங்கி, பெரும் சர்ச்சைக்குள்ளானது.இதையடுத்து, விதிமீறும் கன்டெய்னர் லாரிகளுக்கு, மணலி போக்குவரத்து போலீசார், கடும் அபராதம் விதிக்க துவங்கினர். நாளொன்றுக்கு, 400 லாரிகள் வரை, தலா, 4,100 வீதம், 2 லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதமாக விதிக்கப்பட்டது.'நேற்று மட்டும், 400க்கும் மேற்பட்ட லாரிகளுக்கு, 2.26 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. டிச., 29ல் இருந்து, 15 லட்சம் ரூபாய்க்கு மேல், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது' என, போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபிதாஸ் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE