சென்னை - சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் உயர் அதிகாரி கைது செய்யப்பட்டார்.சென்னை, கோவளத்தைச் சேர்ந்த, 13 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், வண்ணாரப்பேட்டையில் வசித்த, அவரது சித்தி ஷகிதா பானு, 23, மதன்குமார், 35, உள்ளிட்ட எட்டு பேரை, 'போக்சோ' சட்டத்தில், வண்ணாரப்பேட்டை மகளிர் போலீசார் கைது செய்தனர்.அதன்பின், தற்போது 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள, எண்ணுார் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் புகழேந்தி, அவரது நண்பர், பா.ஜ., பிரமுகர் ராஜேந்திரன், தனியார் 'டிவி' நிருபர் வினோபாஜி உட்பட, 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த வழக்கில், கீழ்ப்பாக்கத்தில் செயல்படும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுமான பிரிவு தலைமை செயற்பொறியாளர் கண்ணன், 53, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.உயர் அதிகாரியான கண்ணன், மதுரையைச் சேர்ந்தவர். அவர், சென்னை சைதாப்பேட்டையில் தனியார் விடுதியில் தங்கி, கீழ்ப்பாக்கத்தில் பணிபுரிந்து வந்தார்.அவர், கார்த்திக் என்பவரின் உதவியுடன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது, விசாரணையில் தெரிய வந்தது. சிறுமியும் அடையாள அணிவகுப்பில் கண்ணனை உறுதி செய்துள்ளார்.அரசு உயர் அதிகாரியான கண்ணனை, காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE