சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்ச இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டுகள் சிறை

Added : ஜன 08, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு - சென்னை, தனியார் நிறுவனம் சார்பில், வளசரவாக்கம் பகுதியில், 2016- - 18ம் ஆண்டில், மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.கடந்த, 2018, நவ., 19ல், மழைநீர் கால்வாயிலிருந்த அடைப்புகளை சரி செய்யும் பணியை, அந்நிறுவனத்தைச் சேர்ந்த தங்கதுரை, 35, என்பவர் கண்காணித்து வந்தார்.அப்போது, அங்கு வந்த வளசரவாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், 52, கால்வாய் பணி

செங்கல்பட்டு - சென்னை, தனியார் நிறுவனம் சார்பில், வளசரவாக்கம் பகுதியில், 2016- - 18ம் ஆண்டில், மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.கடந்த, 2018, நவ., 19ல், மழைநீர் கால்வாயிலிருந்த அடைப்புகளை சரி செய்யும் பணியை, அந்நிறுவனத்தைச் சேர்ந்த தங்கதுரை, 35, என்பவர் கண்காணித்து வந்தார்.அப்போது, அங்கு வந்த வளசரவாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், 52, கால்வாய் பணி செய்யவிடாமல் தடுத்து, தங்கதுரையின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தார். பின், வாகனத்தை விடுவிக்க, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார்.கொடுக்க விரும்பாத தங்கதுரை, சென்னை, ஆலந்துார் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார்.நவ., 30ம் தேதி, வளசரவாக்கம், ஆற்காடு சாலையில், தங்கதுரையிடம், 8,000 ரூபாய், இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியபோது, கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கு விசாரணை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.கே.ரஜினி முன் நடந்து வந்தது.இவ்வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இன்ஸ்பெக்டர் அய்யப்பனுக்கு, மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.அபராதம் கட்ட தவறினால், ஆறு மாதம் கூடுதல் சிறை தண்டனை விதித்து, நீதிபதி ஏ.கே.கே.ரஜினி, நேற்று உத்தரவிட்டார். அரசு தரப்பில், கூடுதல் அரசு வழக்கறிஞர் உஷாராணி ஆஜரானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X