சிறிய ஒட்டகச்சிவிங்கி
உலகின் மிகச்சிறிய ஒட்டகச்சிவிங்கி ஆப்ரிக்காவில் வாழ்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று உகாண்டா நாட்டிலும், மற்றொன்று அங்கோலாவிலும் உள்ளன. இவை இரண்டும் வாதம் பிரச்னை காரணமாக, ஒன்று ஒன்பது அடி, 4 இன்ச், மற்றொன்று 8.5 அடி உயரத்துக்கு மேல் வளரவில்லை. இது சாதாரண ஒட்டகச்சிவிங்கியுடன் ஒப்பிடும் போது பாதி உயரம் தான். இவைகளுக்கு நைஜெல், ஜிமில் என்று பெயர். நைஜெல் 2015ம் ஆண்டிலும், ஜிமில் 2020 ஜூலையிலும் பரிசோதிக்கப்பட்டு அதன் உயரம் அளவிடப்பட்டது. அதன்பின் அவற்றின் உயரம் அதிகரிக்கவே இல்லை.
தகவல் சுரங்கம்: நீளமான நதி
ஆசியாவின் நீளமான நதிகளில் ஒன்று சிந்து நதி. இது திபெத்திய பீடபூமியில் மேற்கு பகுதியில் மானசரோவர் அருகே உருவாகி, காஷ்மீரின் லடாக் வழியாக பாகிஸ்தானுக்குள் பாய்ந்து கராச்சி அருகே அரபிக்கடலில் கலக்கிறது. இது பாகிஸ்தானின் முக்கிய நதிகளில் ஒன்று. இதன் நீளம் 3610 கி.மீ. இதற்கு ஜீலம், செனாப், சட்லெஜ், ராவி, பியாஸ் உள்ளிட்ட பல இடது கிளை ஆறுகள் உள்ளன. இந்தியா - பாகிஸ்தான் இடையே பாயும் சிந்து நதியில், இருநாடுகளும் நீரை பங்கிட்டு கொள்வது குறித்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE