கம்பம் : கேரளா இடுக்கி மாவட்டத்தில் மாறுபட்ட சீதோஷ்ண நிலையால் ஏலச்செடிகளில் நோய் தாக்கும் அபாயம் உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.
இம்மாவட்டத்தில் தற்போது அதிகாலையில் பனிமூட்டமும், பின்னர் சாரல் மழையும், மாலையில் பனிப்பொழிவும் என மாறி மாறி சீதோஷ்ண நிலை வித்யாசமாக உள்ளது. இதனால் புளியன்மலை, வண்டன்மேடு, அந்நியார் தொழு, ஆமையாறு, கட்டப்பனை, மாலி, கணவாய்குழி, மாதவன்கானல், மேப்பாறை, சங்குண்டான், இஞ்சிப்பிடிப்பு, வெங்கலப்பாறை, சுல்தானியா உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள், ஏலக்காய் சாகுபடி தொழில்நுட்ப ஆலோசகர்களிடம் ஆலோசனை கேட்டு வருகின்றனர். இலைக்கருகல் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. இதற்கு கூடுதலாக பூச்சி மருந்துகள் அடிக்க வேண்டி வரும். இதனால் மகசூல் குறையும் வாய்ப்பும் உள்ளது என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE