கம்பம் : கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற வழக்குகளில் தலைமறைாக இருந்த கண்ணன் 36, மலைச்சாமி 38 , ஆகியோரை 4 மாதத்திற்குப்பின் திருப்பூரில் வைத்து கம்பம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
2020 செப்டம்பரில் கம்பம் அரசு பஸ் பனிமனை முன் பிக்கப் வேனை சோதனைசெய்த போலீசார் 176 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதில் இருந்த கம்பம் வேல்முருகன் 45, குபேந்திரன் 37, கைது செய்யப்பட்டனர். சொகுசு கார், டூவீலர், வேன் பறிமுதல் செய்யப்பட்டது.இதே பகுதி மலைச்சாமி, கண்ணன், காளிராஜை தேடினர். கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அருகில் பூட்டிக்கிடந்த கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 80 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மறைத்து வைத்து கேரளாவிற்கு கடத்த முயன்றதாக மலைச்சாமி, கண்ணன், காளிராஜ் மீது தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.காளிராஜ் மட்டும் கைது செய்யப்பட்டார். மற்றவர்களை பிடிக்க சாய்சரண்தேஜஸ்வி எஸ்.பி., உத்தரவில் கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
திருப்பூரில் இருந்த கண்ணன், மலைச்சாமியை போலீசார் கைது செய்தனர். 4 மாதமாக டிமிக்கி கொடுத்து வந்த கஞ்சா வியாபாரிகளை கைது செய்த தனிப்படையினரை எஸ்.பி. பாராட்டினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE