கம்பம் : தேக்கடியை தலைமையிடமாக கொண்ட கே.சி.பி.எம்.சி மற்றும் சி.பி.எம்.சி. எஸ் ., ஆகிய ஏலக்காய் ஏல நிறுவனங்கள் இதயதுடிப்பு, இதயத்தில் ஏற்படும் பிரச்னைகளை கண்டறிய ரூ. 1 லட்சத்து 8 ஆயிரம் மதிப்புள்ள மூன்று இ.சி.ஜி., மிஷின்களை கம்பம் அரசு மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கின. இவற்றை சி.பி.எம்.சி.எஸ். தலைவர் டி.கே.எஸ். உதயகுமார், கே.சி.பி.எம்.சி. இணை நிர்வாக இயக்குநர் கே.ஜியாவுதின்அகமது, துணைத்தலைவர் டி.எஸ்.கே. குகன், மண்டல மேலாளர் வி.எம்.அன்பழகன் ஆகியோரிடம் இருந்து, அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ஜெ. பொன்னரசன் பெற்றுக்கொண்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE