பொது செய்தி

தமிழ்நாடு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; முதல்வர் துவக்குகிறார்

Added : ஜன 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை : அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை ஜன., 16 முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் துவக்கி வைக்கின்றனர்.ஜல்லிக்கட்டு நடக்கும்இடம், வாடிவாசல் உள்ளிட்ட பகுதிகளை அமைச்சர் உதயகுமார்ஆய்வு செய்தார். கலெக்டர் அன்பழகன், எஸ்.பி., சுஜித்குமார், எம்.எல்.ஏ., மாணிக்கம்,ஆர்.டி.ஒ., முருகானந்தம்,பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சேதுராமன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை,
 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; முதல்வர் துவக்குகிறார்

மதுரை : அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை ஜன., 16 முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் துவக்கி வைக்கின்றனர்.

ஜல்லிக்கட்டு நடக்கும்இடம், வாடிவாசல் உள்ளிட்ட பகுதிகளை அமைச்சர் உதயகுமார்ஆய்வு செய்தார். கலெக்டர் அன்பழகன், எஸ்.பி., சுஜித்குமார், எம்.எல்.ஏ., மாணிக்கம்,ஆர்.டி.ஒ., முருகானந்தம்,பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சேதுராமன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை, தாசில்தார் பழனிக்குமார், விழா குழுவினர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர். பின் பாலமேடு ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசலையும் அமைச்சர் ஆய்வு செய்தார். குடிமராமத்து திட்டத்தின் கீழ் துார்வாரப்பட்டு தற்போது நிரம்பியுள்ள சாத்தையாறு அணையையும் பார்வையிட்டார்.

அமைச்சர் கூறுகையில், ''அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை ஜன.,16 முதல்வர், துணை முதல்வர் துவக்கி வைக்க வருகின்றனர். மாடுபிடி வீரர்கள்,காளை உரிமையாளர்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள தேவையான மருத்து உபகரணங்கள் தயார்நிலையில் உள்ளன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
08-ஜன-202108:23:22 IST Report Abuse
natarajan s ஒரு முதல்வருக்கு வேறு வேலையே இல்லையா நாட்டில்? ஜல்லி கட்டை துவக்குவது எல்லாம் அத்தியாவசிய பணியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X