மதுபாட்டிலால் நண்பரைகுத்தி கொன்றவர் கைது
மதுரை: காமராஜபுரம் வ.உ.சி., தெரு மீரான் 30. அப்பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ராஜூ 27. நேற்றுமுன்தினம் இரவு மீரான், ராஜூ மது குடித்த போது தகராறு ஏற்பட்டது. இதில் ராஜூ, மீரானை மது பாட்டிலால் தொண்டையில் குத்தினார். இதில் மீரான் பலியானர். கீரைத்துறை போலீசார் ராஜூவை கைது செய்தனர்.
ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பலி
திருமங்கலம்: புங்கங்குளம் பெரியகாரி 56. இவர் வீட்டு பொருட்கள் வாங்க பாண்டியராஜன் ஷேர் ஆட்டோவில் திருமங்கலம் சென்றார். புங்கங்குளம் வளைவில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் காயமடைந்த பெரியகாரி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
பிளக்ஸ்: போலீஸ் விசாரணை
மேலுார்: அ.ம.மு.க., மாவட்ட வழக்கறிஞரணி இணை செயலாளர் சுரேந்தர். இவர் போலீசில் கொடுத்த புகாரில், ''உயர்நீதிமன்றம் உத்தரவை மீறி 3இடங்களில் பொங்கல் பரிசாக அரசு கொடுக்கும் பணத்தை அ.தி.மு.க.,வினர் வழங்குவது போல் பிளக்ஸ் வைத்துள்ளனர்,'' என கூறியிருந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
45 பவுன் நகையுடன் லாக்கர் திருட்டு
மேலுார்: அழகர்கோயில் விவசாயி சோமசுந்தரம் 60. உடல் நலக்குறைவால் மூன்று நாட்களுக்கு முன்பு மனைவியுடன் மருத்துவனையில் தங்கி சிகிச்சை பெற்றார். நேற்று இரவு வீடு திரும்பினார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 45 பவுன் நகை, ரூ.18 ஆயிரம் இருந்த லாக்கர் திருடுபோனது தெரியவந்தது. மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE