உசிலம்பட்டி : ''உசிலம்பட்டிபசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகில் அமைக்கப்படும் மூக்கையாத்தேவர் சிலை திறப்பு மற்றும் பெருங்கா மநல்லூர் தியாகிகள் மணி மண்டபம் அடிக்கல் நாட்டு விழா ஜன., 16ல் நடக்கிறது.
முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்கின்றனர்,'' என, அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.உசிலம்பட்டியில் சிலை அமைக்கும் பணி மற்றும் பெருங்காமநல்லூரில் கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடிய போது சுட்டுக்கொல்லப்பட்ட 16 பேர் நினைவாக ரூ. ஒரு கோடி 37 லட்சத்தில் மணி மண்டபம் அமையும் இடத்தை அமைச்சர் உதயகுமார் ஆய்வு செய்தார். கலெக்டர் அன்பழகன், எஸ்.பி., சுஜித்குமார், எம்.எல்.ஏ., நீதிபதி, உசிலம்பட்டி ஆர்.டி.ஒ., ராஜ்குமார், தாசில்தார்கள் விஜயலட்சுமி, சாந்தி உடன் சென்றனர்.
பெருங்காமநல்லூரில் துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியில் மணிமண்டபம் அமைப்பது தொடர்பாக ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் அமைச்சர் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு பொதுநலச் சங்க நிர்வாகிகள் பொன்னையா, சின்னன், ஆவின் நிர்வாகக்குழு உறுப்பினர் துரை தனராஜ், கிராம மக்கள் சார்பில் சேடபட்டி ஒன்றியக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாயக்காள் பெண்கள் சங்க நிர்வாகி செல்வி பிரித்தா பங்கேற்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியில் அணையா விளக்குடன் கோயிலும், தற்போது தேர்வு செய்யப்பட்ட 5 ஏக்கரில் மணிமண்டம் கட்டுவது எனவும், கிராமத்தினர் இரு நாட்களுக்குள் பேசி முடிவு தெரிவிக்கவும் கேட்டு கொள்ளப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE