மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 2020 டிச., 30 ஒரு தம்பதியரால் கண்டெடுக்கப்பட்ட 10 நாள் மதிக்கதக்க பெண் குழந்தை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டு அமிழ்தினி என பெயரிடப்பட்டுள்ளார்.
குழந்தையை வேறு ஒரு குழந்தை இல்லாத தம்பதியரிடம் பராமரிக்க ஒரு வாரம் கொடுக்கப்பட்டு தற்போது முழு விபரங்கள் தெரியாததால் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தைக்கு குழந்தைகள் நலக்குழு தலைவர் விஜய சரவணன் பெயர் சூட்டினார். குழந்தையை தவறவிட்டவர்கள் குழந்தைகள் நலக்குழு அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகை நேரடியாக அல்லது 97895 15915 அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என உறுப்பினர்கள் சாந்தி, சண்முகம், பாண்டியராஜா தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE