பொது செய்தி

இந்தியா

நிரவ் மோடிக்கு எதிராக 'அப்ரூவர்' ஆன சகோதரி

Updated : ஜன 08, 2021 | Added : ஜன 08, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடிக்கு எதிராக அவரது இளைய சகோதரி மற்றும் மைத்துனர் 'அப்ரூவர்' ஆக சம்மதித்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல்
NiravModi, Sister, Approver, PNB, MoneyLaundering, நிரவ் மோடி, பண மோசடி, சகோதரி, அப்ரூவர்

புதுடில்லி: லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடிக்கு எதிராக அவரது இளைய சகோதரி மற்றும் மைத்துனர் 'அப்ரூவர்' ஆக சம்மதித்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.

மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பினர். ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிரவ் மோடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் அமலாக்கத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நிரவ் மோடியின் இளைய சகோதரி புர்வி மோடி 47 ஐரோப்பிய நாடான பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர். இவரது கணவர் மயன்க் மேத்தா பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்.


latest tamil newsவங்கி மோசடி வழக்கில் இவர்கள் இருவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் பல்வேறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். புர்வி மோடி பெயரில் இருந்த சுவிஸ் வங்கி கணக்குகள் உள்ளிட்ட சில சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இந்நிலையில் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக தங்களுக்கு தெரிந்த விபரங்கள் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அளித்து 'அப்ரூவர்' ஆக புர்வியும் மயன்க்கும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
இதன் வாயிலாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிரவ் மோடிக்கு சொந்தமான இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 579 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்ய இவர்கள் உதவ உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-ஜன-202116:56:40 IST Report Abuse
J.V. Iyer காங்கிரஸ் ஆட்சியில் எப்படி எப்படியெல்லாம் கொள்ளை அடிக்க விட்டிருக்கிறார்கள்? ஆரே தேவுடா
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
08-ஜன-202112:37:56 IST Report Abuse
S.Baliah Seer முதலில் இந்த அப்ரூவர் என்பதை ஒழிக்கணும்.செய்வதை எல்லாம் செய்துவிட்டோ, அல்லது அக்கரமத்திற்குத் துணை போகிவிட்டோ நல்லவர்கள் போல் நடித்து அரசுக்கு ஆதரவாளராக மாறுவது ஆள்காட்டி வியாபாரம். இவர்களைவிட குற்றவாளிகளே மேல்.
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
08-ஜன-202112:58:37 IST Report Abuse
ShivRam ShivShyamஅண்ணனுக்கு இப்போவே உதறல் எடுக்குது 2G ல மற்றும் மத்த ஊழல் கேஸ்கள் ல யார்யார் அப்ரூவர் ஆகா போறாங்களோனு .. இலவு காத்த கிளி சுடலை .. கிலி பிடிச்ச இழவு - உபி...
Rate this:
Sadagopan Varadhachari - Hosur,இந்தியா
08-ஜன-202113:07:34 IST Report Abuse
Sadagopan Varadhachariஅப்ப்ரூவராக மாற இருந்தவன் ஏற்க்கெனவே காலி...
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
08-ஜன-202110:36:54 IST Report Abuse
Allah Daniel இவணங்கு எல்லாரும் திருடியதற்கு முக்கிய காரணம்...தேச துரோகி...P-சீ-dumb-பாரம்...
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-ஜன-202114:26:58 IST Report Abuse
தமிழவேல் அப்போ, தப்ப விட்டது 🤔...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X