ஈரோடு: ஈரோடு மாவட்ட உழவர் விவாதக்குழு அமைப்பாளர்கள் கூட்டம், நஞ்சப்பன் தலைமையில் நடந்தது. செயலாளர் வெங்கடாசலபதி வரவேற்றார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி, உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ஆசைதம்பி பேசினர். சென்னிமலை, கோபி, பெருந்துறை வட்டாரத்தில் விடுபட்ட குளங்களை, அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில் சேர்க்க வேண்டும். கீழ்பவானி பாசன பகுதியில், தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை துவங்க வேண்டும். வேளாண் விரிவாக்க மையங்களில், கொளுஞ்சி, சணப்பு, தக்கைப்பூண்டு, கொள்ளு, நரிப்பயிறு போன்ற, தழை உர விதைகள் விற்பனை செய்ய வேண்டும். உழவர் விவாதக்குழு அமைப்பாளர்களுக்கு பயிற்சி தொகை, 250 ரூபாயாக வழங்க வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். தோல் அம்மை நோய் பாதிப்புக்குள்ளான கால்நடைகளுக்கு, மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE