ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், இரண்டாவது நாளாக, முதல்வர் பழனிசாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டபோது, பல்வேறு சிறு நிகழ்வு நடந்தது.
* ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்காவில், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார். அதன் அருகே அமைந்திருந்த கருணாநிதி சிலையை, வெள்ளை நிற திரையால் மறைத்திருந்தனர்.
* முதல்வர் பிரசார வேனுடன், முதல்வரையும் முன்னாள் மேயர் மல்லிகா, திருஷ்டி பூசணி சுற்றி உடைத்தார்.
* ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலுக்குள் சென்று, முதல்வர் தரிசனம் செய்தார்.
* சித்தோட்டில், மாநகராட்சி முன்னாள் துணை மேயர் பழனிசாமி, வெள்ளி வாளை முதல்வருக்கு பரிசாக வழங்கினார்.
* வீரப்பன்சத்திரத்தில், 80 அடி உயர அ.தி.மு.க., கட்சிகொடியை முதல்வர் ஏற்றி வைத்தார்.
* முதல் நாள் பிரசாரத்தில், அனைத்து இடங்களிலும் ஸ்டாலினை திட்டித்தீர்த்த முதல்வர், நேற்று அரசின் திட்டங்களை மட்டும் கூறிவிட்டு, ஓரிரு இடத்தில் மட்டும் ஸ்டாலினை திட்டினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE