முதல்வர் பிரசாரம்; 2ம் நாள் துளிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பிரசாரம்; 2ம் நாள் துளிகள்

Added : ஜன 08, 2021
Share
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், இரண்டாவது நாளாக, முதல்வர் பழனிசாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டபோது, பல்வேறு சிறு நிகழ்வு நடந்தது.* ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்காவில், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார். அதன் அருகே அமைந்திருந்த கருணாநிதி சிலையை, வெள்ளை நிற திரையால் மறைத்திருந்தனர்.* முதல்வர் பிரசார வேனுடன், முதல்வரையும் முன்னாள்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், இரண்டாவது நாளாக, முதல்வர் பழனிசாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டபோது, பல்வேறு சிறு நிகழ்வு நடந்தது.

* ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்காவில், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார். அதன் அருகே அமைந்திருந்த கருணாநிதி சிலையை, வெள்ளை நிற திரையால் மறைத்திருந்தனர்.


* முதல்வர் பிரசார வேனுடன், முதல்வரையும் முன்னாள் மேயர் மல்லிகா, திருஷ்டி பூசணி சுற்றி உடைத்தார்.


* ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலுக்குள் சென்று, முதல்வர் தரிசனம் செய்தார்.


* சித்தோட்டில், மாநகராட்சி முன்னாள் துணை மேயர் பழனிசாமி, வெள்ளி வாளை முதல்வருக்கு பரிசாக வழங்கினார்.


* வீரப்பன்சத்திரத்தில், 80 அடி உயர அ.தி.மு.க., கட்சிகொடியை முதல்வர் ஏற்றி வைத்தார்.


* முதல் நாள் பிரசாரத்தில், அனைத்து இடங்களிலும் ஸ்டாலினை திட்டித்தீர்த்த முதல்வர், நேற்று அரசின் திட்டங்களை மட்டும் கூறிவிட்டு, ஓரிரு இடத்தில் மட்டும் ஸ்டாலினை திட்டினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X