ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், '108' ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கான ஆட்கள் தேர்வு வரும், 11 காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.
மருத்துவ உதவியாளர் பணிக்கு, பி.எஸ்.சி., நர்சிங், ஜி.என்.எம்., - ஏ.என்.எம்., - டி.பார்ம், டி.எம்.எல்.டி., பி.எஸ்சி., விலங்கியல், தாவரவியல், உயிரியல், வேதியியல், மைக்ரோபயாலஜி, தாவர உயிரியியல் போன்றவை படித்த, 19 முதல், 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம், 14 ஆயிரத்து, 426 ரூபாய். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். அதுபோல ஓட்டுனர் பணிக்கு, 14 ஆயிரத்து, 226 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். 24 முதல், 35 வயதுக்கு உட்பட்ட எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்ற ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம், பேட்ஜ் வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும். எழுத்து தேர்வு, தொழில் நுட்ப தேர்வு, மனிதவள துறை நேர்காணல் போன்றவை மூலம் தேர்வு செய்யப்படுவர். கூடுதல் விபரம் பெற, 044 28888060, 75, 77, 88256 31174 போன்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE