பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு நீர் திறப்பு

Added : ஜன 08, 2021
Share
Advertisement
பவானிசாகர்: பவானிசாகர் அணையில் இருந்து, இரண்டாம் போக புன்செய் பாசனத்துக்கு, கீழ்பவானி வாய்க்காலில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. பவானிசாகர் அணையின் மூலம், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் 2.07 லட்சம் ஏக்கர் நிலம், அரக்கன் கோட்டை-தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பாசனங்களில், 40 ஆயிரத்து, 247 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஆண்டு ஆக., முதல் டிச., 27 வரை,

பவானிசாகர்: பவானிசாகர் அணையில் இருந்து, இரண்டாம் போக புன்செய் பாசனத்துக்கு, கீழ்பவானி வாய்க்காலில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. பவானிசாகர் அணையின் மூலம், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் 2.07 லட்சம் ஏக்கர் நிலம், அரக்கன் கோட்டை-தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பாசனங்களில், 40 ஆயிரத்து, 247 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஆண்டு ஆக., முதல் டிச., 27 வரை, கீழ்பவானி வாய்க்கால் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது இரண்டாம் போக புன்செய் பாசனத்துக்கு, ஒற்றைப்படை மதகுகள் வழியாக, நேற்று காலை, 9:00 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதல் கட்டமாக, 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. படிப்படியாக, 2,300 கன அடி வரை அதிகரிக்கப்படும். இதன் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில், ஒரு லட்சத்து, 3,500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். ஏப்., 30 வரை தண்ணீர் விடப்படும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று, பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X