பொது செய்தி

தமிழ்நாடு

விசைத்தறிக்கு தனி ரகம்; முதல்வரிடம் முறையீடு

Added : ஜன 08, 2021
Share
Advertisement
ஈரோடு: விசைத்தறிக்கு தனி ரகம், ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, ஈரோடு மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமியிடம், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ், செயலாளர் வேலுசாமி மனு வழங்கினர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: விசைத்தறி தொழில் தொடர்ந்து அழிந்து வருவதை தடுக்க, மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும்,

ஈரோடு: விசைத்தறிக்கு தனி ரகம், ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, ஈரோடு மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமியிடம், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ், செயலாளர் வேலுசாமி மனு வழங்கினர்.


இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: விசைத்தறி தொழில் தொடர்ந்து அழிந்து வருவதை தடுக்க, மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும், புதிய மின் திட்டத்தில் விலக்கு தரவேண்டும். விசைத்தறியாளர் பெற்றுள்ள, 65 கோடி ரூபாய் வங்கி மூலதன கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகத்தில், ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகிறது. இதற்கு மாற்றாக, தானியங்கி விசைத்தறி, ஆட்டோ லூம், ஸ்லூசர், ரேபியர் போன்ற தறிகள் இயங்குவதால், இத்தொழில் பாதிக்கிறது. விசைத்தறிகளுக்கு தனி ரக ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசின் இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடை உற்பத்தி பணி வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் மூலம், விசைத்தறியாளர்களுக்கு கடன் வழங்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுக்கு ஒரு முறை, இலவச வேட்டி, சேலைக்கான கூலி உயர்வு வழங்க வேண்டும். விசைத்தறி துணிகளை, கோ-ஆப்டெக்ஸிலும், விற்க வேண்டும். ஜி.எஸ்.டி., வரியில் நிலுவையில் உள்ள, உள்ளீட்டு வரியை அவ்வப்போது திரும்ப வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X