அம்மாபேட்டை: அம்மாபேட்டை அருகே, பட்டியில் புகுந்த கும்பல், ஆறு ஆடுகளை திருடிச் சென்றது, விவசாயிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாபேட்டையை அடுத்த குருவரெட்டியூர், இரட்டையன் தோட்டத்தை சேர்ந்தவர் செங்கோடன், 42; விவசாயியான இவருக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. மேலும், 20 ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை ஆடுகளுக்கு தீவனம் வைக்க சென்றார். அப்போது பட்டியில் அடைத்திருந்த, 20 ஆடுகளில் ஆறு ஆடுகளை காணவில்லை. செங்கோட்டையன் புகாரின்படி, அம்மாபேட்டை போலீசார், ஆடு களவாணிகளை தேடி வருகின்றனர். காணாமல் போன ஆடுகளின் மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கலாம் எனத் தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE