பொது செய்தி

தமிழ்நாடு

இரட்டை மேம்பாலம்: இன்று முதல்வர் திறப்பு

Added : ஜன 08, 2021
Share
Advertisement
வீரபாண்டி: இரட்டை மேம்பாலத்தை, முதல்வர், இன்று திறந்து வைக்கிறார். சேலம் - கோவை நான்கு வழிச்சாலை, அரியானூர் சந்திப்பில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், 45 கோடி ரூபாய் செலவில், இரட்டை மேம்பால கட்டுமானப்பணி, 2019 ஜனவரியில் தொடங்கியது. இதற்காக, சந்திப்பின் இருபுறமும், தலா ஐந்து வீதம், இரட்டை மேம்பாலங்களுக்கு, 20 தூண்கள் அமைத்து, 700 மீ., நீளத்துக்கு, ஒவ்வொரு பாலத்தையும், நான்கு

வீரபாண்டி: இரட்டை மேம்பாலத்தை, முதல்வர், இன்று திறந்து வைக்கிறார். சேலம் - கோவை நான்கு வழிச்சாலை, அரியானூர் சந்திப்பில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், 45 கோடி ரூபாய் செலவில், இரட்டை மேம்பால கட்டுமானப்பணி, 2019 ஜனவரியில் தொடங்கியது. இதற்காக, சந்திப்பின் இருபுறமும், தலா ஐந்து வீதம், இரட்டை மேம்பாலங்களுக்கு, 20 தூண்கள் அமைத்து, 700 மீ., நீளத்துக்கு, ஒவ்வொரு பாலத்தையும், நான்கு வழிச்சாலை அகலத்துக்கு மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இப்பாலத்தை, இன்று காலை, 11:00 மணிக்கு, முதல்வர் பழனிசாமி, சென்னையில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் திறந்து வைக்கிறார். இதனால், புது பாலத்தை, நேற்று, கலெக்டர் ராமன் பார்வையிட்டு, விழா முன்னேற்பாடு குறித்து, அதிகாரிகளிடம் ஆலோசித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X