சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புரோக்கரை நியமித்து ஆன்லைன் மூலம் லாட்டரி விற்ற மொத்த வியாபாரி கைது

Added : ஜன 08, 2021
Share
Advertisement
சேலம்: புரோக்கர்களை நியமித்து, ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகளை விற்ற, சேலத்தை சேர்ந்த மொத்த வியாபாரியை, போலீசார் கைது செய்தனர்.சேலத்தில் இருந்து, தமிழகம் முழுதும், ஆன்லைன் லாட்டரி விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது. இதனால், சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சந்திரசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், ஆன்லைன் லாட்டரி கும்பல் குறித்து விசாரித்தனர். இந்நிலையில்,

சேலம்: புரோக்கர்களை நியமித்து, ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகளை விற்ற, சேலத்தை சேர்ந்த மொத்த வியாபாரியை, போலீசார் கைது செய்தனர்.


சேலத்தில் இருந்து, தமிழகம் முழுதும், ஆன்லைன் லாட்டரி விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது. இதனால், சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சந்திரசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், ஆன்லைன் லாட்டரி கும்பல் குறித்து விசாரித்தனர். இந்நிலையில், சூரமங்கலம் போலீசார், கடந்த வாரம், இரும்பாலையை சேர்ந்த லாட்டரி வியாபாரி கணேசன், 40, என்பவரை கைது செய்து விசாரித்தனர். அதில், தாரமங்கலத்தை சேர்ந்த சீனிவாசன், 48, சேலம் உள்பட தமிழகம் முழுதும், புரோக்கர்களை நியமித்து, கமிஷன் அடிப்படையில், ஆன்லைனில் லாட்டரி விற்பனையை மேற்கொள்வதாக தெரிவித்தார். இதனால், சீனிவாசனை, தனிப்படையினர் கண்காணித்தனர். அவர், கேரள லாட்டரி மொத்த வியாபாரிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, புரோக்கர்கள் மூலம், லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தினர். நேற்று முன்தினம் இரவு, சீனிவாசனை கைது செய்த தனிப்படையினர், லாட்டரி கும்பல் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X