தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் மழையால், மலைப்பகுதிகளில் திடீர் அருவிகள் தோன்றி, தண்ணீர் பெருக்கெடுத்து பாய்கிறது.
தர்மபுரி மாவட்டம் முழுவதும், பருவ மழையால், கிணறு, ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பின. மேலும், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. மேலும், அடுத்தடுத்து பெய்த இரண்டு புயல் மழையால், நிரம்பாமல் இருந்த மற்ற நீர்நிலைகளும் நிரம்பின. வாணியாறு மற்றும் வரட்டாறு உள்ளிட்ட தடுப்பணைகளும் நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன. தற்போது, காற்றழுத்த தாழ்வு நிலையால், இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மலைப்பகுதிகளில் திடீர் அருவிகள் தோன்றி, தண்ணீர் பாய்ந்தோடுகிறது. குறிப்பாக, மொடக்கேரி, வத்தல்மலை, மலையூர் உள்ளிட்ட மலைகளில், இவ்வாறு திடீர் அருவிகள் தோன்றி உள்ளன. இதை காண, பொதுமக்கள் அதிகளவில் சென்று வருகின்றனர். மேலும், விடுமுறை நாட்களில், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள், இதில் குளித்து, விளையாடி மகிழ்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE