ஓசூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அருகே உள்ள, கல்ரபட்டியை சேர்ந்தவர் சதினா, 23; ஓசூரிலுள்ள தனியார் மருத்துவமனையில், நர்ஸாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த நவ., 14 அன்று, பணிக்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர், ஓசூர் டவுன் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். அதில், உறவினரான ஜெகதீசன், 26, என்பவர் மீது, சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன்படி போலீசார், வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement