வேளாண் சட்டம் குறித்து விவாதிக்க தயாரா? முதல்வருக்கு சிதம்பரம் சவால்

Updated : ஜன 08, 2021 | Added : ஜன 08, 2021 | கருத்துகள் (107) | |
Advertisement
சிவகங்கை: வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து தன்னுடன் விவாதிக்க தயாரா என முதல்வர் பழனிசாமிக்கு காங்., எம்பி., சிதம்பரம் சவால் விடுத்துள்ளார்.மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சில மாநில சட்டசபையில் இந்த சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Chidambaram, Palanisamy, FarmLaws, Congress, காங்கிரஸ், சிதம்பரம், வேளாண் சட்டம், விவசாயிகள், விவாதம், முதல்வர், பழனிசாமி

சிவகங்கை: வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து தன்னுடன் விவாதிக்க தயாரா என முதல்வர் பழனிசாமிக்கு காங்., எம்பி., சிதம்பரம் சவால் விடுத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சில மாநில சட்டசபையில் இந்த சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்திலும் தீர்மானம் நிறைவேற்றுமாறு திமுக, காங்., உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், முதல்வர் பழனிசாமி, வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை எனவும், நன்மை தான் உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் காங்., கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் காங்., எம்பி.,யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார்.


latest tamil news




அப்போது அவர் பேசியதாவது: திமுக, காங்கிரஸ் பல ஆண்டு காலமாக கூட்டணியாக உள்ளது. தற்போது தமிழக அரசியலில் பல முறைகேடுகள் நுழைந்துவிட்டது. வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு என்ன நன்மை, எதற்காக ஆதரிக்கிறீர்கள் என்று தமிழக முதல்வர் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இருக்கும் வரை பா.ஜ., முளைக்கவே முடியாது, முளைக்கவும் விடமாட்டோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கல்வி கடன், விவசாயக்கடன், மகளிர் கடன்கள் என பா.ஜ., ஆட்சியில் நிறுத்தப்பட்ட வங்கி கடன்கள் மீண்டும் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-ஜன-202111:34:33 IST Report Abuse
Malick Raja சீனாதானா .. சும்மா சாவல் எல்லாம் விடாதீங்க ..
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
09-ஜன-202106:13:32 IST Report Abuse
Srivilliputtur S Ramesh நீ எந்த எந்த வெளிநாட்டு வங்கிகளில் ரகசியமா கள்ளப்பணத்தை சேர்த்து வெச்சுருக்க என்று நான் உன்னுடன் விவாதிக்க தயார். நீ இது குறித்து என்னுடன் விவாதிக்க தயாரா? முதல்வருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ் சவால்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
08-ஜன-202122:57:21 IST Report Abuse
RajanRajan ஹலோ கிங்பின் பாய் ஏன் உன் லண்டன் சொத்துப்பது எப்படி உண்டாக்கினேன்னு விவாதிப்போம் . சாந்தி சிரிச்சுடுமே. உனக்கு தான் அந்த சுரணை எல்லாம் கிடையாதே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X