12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்!| Dinamalar

12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்!

Updated : ஜன 08, 2021 | Added : ஜன 08, 2021 | கருத்துகள் (1) | |
வெள்ளி முதல் வியாழன் வரை (8.1.2021 - 14.1.2021 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம்சந்திரன், சுக்கிரன், புதனால் நன்மை ஏற்படும். சிவன் வழிபாடு சிரமத்தை போக்கும்.அசுவினி: விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் குணத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. சிலருக்கு உடல் உபாதைகள் வர
வாரபலன், பரிகாரம், மேஷம், ரிஷபம், மிதுனம்,  கடகம், சிம்மம்,  கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம், கும்பம், மீனம்

வெள்ளி முதல் வியாழன் வரை (8.1.2021 - 14.1.2021 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்சந்திரன், சுக்கிரன், புதனால் நன்மை ஏற்படும். சிவன் வழிபாடு சிரமத்தை போக்கும்.

அசுவினி: விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் குணத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. சிலருக்கு உடல் உபாதைகள் வர வாய்ப்புள்ளது. நகைச்சுவை என்று நினைத்துப் பேசி வம்பில் மாட்ட வேண்டாம்.

பரணி: தாமதமான விஷயங்கள் தானாக கூடி வரும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு அழகான வாரிசு உருவாகும். புதிய முயற்சிகளில் வருத்தம் நேரக்கூடும். தாயின் அன்பு, ஆசியை பெறுவீர்கள்.

கார்த்திகை 1: தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை எட்டுவீர்கள். பணவரவு எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும் ஓரளவுக்கு இருக்கும். பெற்றோர் கூறும் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.

சந்திராஷ்டமம்: 9.1.2021 காலை 6:07 - 11.1.2021 காலை 8:53 மணி


ரிஷபம்சந்திரன், சுக்கிரன், குருவால் நன்மைகள் உண்டு. முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.


latest tamil news
கார்த்திகை 2,3,4: எதிரியால் சிரமங்கள் ஏற்படும். பணியாளர்கள் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் முன்பைவிட படிப்பில் சிறந்து விளங்குவர்.

ரோகிணி: பாஸ்போர்ட், விசா சம்பந்தமான முயற்சியில் இருந்த தாமதம் நீங்கும். தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாயாருடன் ஏற்பட்ட பிரச்னையை மறந்து மன்னிப்பு கேளுங்கள். சமூகத்தில் சில ஏமாற்றங்களை சந்திப்பீர்கள்.

மிருகசீரிடம் 1,2: திட்டமிட்ட விஷயங்களை முடிப்பதற்குள் சோர்வடைவீர்கள். அன்பு வைத்தவர்கள் உங்களை நெகிழ வைப்பார்கள். பணியிடத்தில் பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள். தெய்வ வழிபாடு மன அமைதி தரும்.

சந்திராஷ்டமம்:
11.1.2021 காலை 8:54 - 13.1.2021 மதியம் 12:58 மணி


மிதுனம்சுக்கிரன், செவ்வாய், கேது அற்புதமான பலனை தருவர். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.


மிருகசீரிடம் 3,4: உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்கவும். சிலருடைய ஆதரவால் வெற்றி இலக்கை அடைவீர்கள். நம்பிக்கைக்கு உரியவராக நடந்து கொள்ளுங்கள். மாணவர்கள் படிப்புடன் கலைகளையும் ஆர்வமாக பயில்வர்.

திருவாதிரை: செய்த தவறுக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பீர்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். பிறர் மீது வைத்திருந்த தவறான அபிப்ராயம் மாறும். நேர்மையற்ற செயல்கள் பிரச்னைக்கு வழிவகுக்கும்.

புனர்பூசம் 1,2,3: எதிர்ப்புகளைத் தாண்டி வெல்வீர்கள். பொறுமையுடன் செயல்பட்டால் நன்மை வந்து சேரும். சவாலான சூழலில் சமநிலை இழக்காமல் இருங்கள். தியானம், யோகா செய்வதால் மனம் அமைதி பெறும்.

சந்திராஷ்டமம்: 13.1.2021 மதியம் 12:59 மணி - 14.1.2021 நாள் முழுவதும்


கடகம்குரு, ராகு, சந்திரன் அனுகூல பலன்களை தருவர். குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.

புனர்பூசம் 4: உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவீர்கள். செய்யும் வேலையில் மனநிறைவு காண்பீர்கள். திடீரென்று கூடுதலாக நன்மைகள் வந்து சேரும். வியாபாரிகள் சோம்பலை தவிருங்கள். உடன்பிறந்தோருக்கு உதவி செய்வீர்கள்.

பூசம்: அன்றாட வேலைகளை பொறுப்புடன் செய்வீர்கள். நீண்ட நாளாக இருந்த மனஅழுத்தம் நீங்கும். பணியிடத்தில் இருந்த குற்ற உணர்வு நீங்கும். பிறரின் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களை திருத்துவீர்கள்.

ஆயில்யம்: பணியிடத்தில் உங்களுக்குப் பெரிய பொறுப்பு அளிக்கப்படும். உங்களது நேர்மையால் பிறர் செய்யும் சூழ்ச்சியிலிருந்து தப்புவீர்கள். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள். நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள்.சிம்மம்சுக்கிரன், சனி, செவ்வாய் நன்மை தரும் இடத்தில் உள்ளனர். ராமர் வழிபாடு நிம்மதி தரும்.

மகம்: அன்புக்குரியவர்கள் மகிழ்ச்சி தரும் செய்தி சொல்லுவார்கள். பொழுதுபோக்கு அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டாம். பணியிடத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.

பூரம்: தவறான விஷயங்களில் மனதைச் செலுத்த வேண்டாம். நம்பிக்கை வைத்தவர்கள் உங்களை விட்டுக் கொடுக்காமல் நடந்து கொள்வர். தனிப்பட்ட வாழ்க்கையில் சில புதிய மாற்றங்களை சந்திப்பீர்கள்.

உத்திரம் 1: பிறரது ஆலோசனைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் ஏற்பட்டிருந்த தொய்வை மெல்ல நிமிர்த்துவீர்கள். நண்பர்கள் உங்கள் நன்மைக்காக பாடுபடுவார்கள். நேர்த்தியாக செயல்களை செய்வீர்கள்.


கன்னிகேது, சுக்கிரன், சந்திரன் அளவற்ற நற்பலன்களை தருவர். அனுமன் வழிபாடு வெற்றி தரும்.

உத்திரம் 2,3,4: வாழ்வின் திருப்புமுனையான சம்பவங்களை எதிர்கொள்வீர்கள். சொந்தமாக சிந்தித்து செயல்படுவீர்கள். பிறரது பேச்சுக்கு செவிசாய்க்காமல் நேர்வழியில் செல்வீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் இருக்கும்.

அஸ்தம்: சற்றும் எதிர்பாராத நல்ல நிகழ்வுகள் நடக்கும். பிறர் உங்களை விட்டு பிரிந்துவிடுவார்களோ என்று பயப்பட வேண்டாம். பணிகளில் மனநிறைவு காண்பீர்கள். உறவினர்களுக்கு இயன்ற அளவில் உதவி செய்வீர்கள்.

சித்திரை 1,2: உங்களுக்கு கீழ் பணிபுரிவோரிடம் நியாயமான கடுமை காட்ட வேண்டியிருக்கும். பெற்றோர்கள் பாரபட்சம் இன்றி செயல்படுவர். இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். பொதுநலப் பணிகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள்.


துலாம்குரு, புதன், சந்திரன் தாராளமாக நற்பலனைத் தருவர். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

சித்திரை 3,4: எதிரிகளின் திட்டங்களை புரிந்து கொள்வீர்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வீர்கள். தடைபட்டு வந்த செயல் ஒன்று முடியும். மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். பெண்களின் பயம் நீங்கும்படியான மாற்றங்கள் நிகழும்.

சுவாதி: கூடுதலாக முயற்சி செய்து நினைத்த விஷயத்தை முடிப்பீர்கள். உங்களுக்கு மிக நெருங்கியவர்கள் சொத்து வாங்குவார்கள். பெண்கள் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உறவுகளில் இருந்த மனக்கசப்புகள் மாறும்.

விசாகம் 1,2,3: குதுாகலமான நிகழ்வுகளில் பங்கேற்பீர்கள். கவலைகள் அனைத்தும் மறையும். குடும்பத்தில் புதிதாக இணைந்தவர் தொல்லை கொடுப்பதாக நினைக்க வேண்டாம். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.


விருச்சிகம்புதன், சுக்கிரன், சந்திரன் நன்மைகளை வழங்குவர். துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

விசாகம் 4: பாதுகாப்பின்மை உணர்வு நீங்கும். வெற்றி பெற உற்சாகமாக முயற்சி செய்வீர்கள். தாயாரின் செயலை ஓரவஞ்சனை என்று நினைக்க வேண்டாம். வெளிமனிதர்களிடம் கவனமாகப் பேசவும். எதிலும் நிதானம் தேவை.

அனுஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். வெளிநாட்டில் இருந்தவர்கள் நல்ல காரணத்தினால் தாய்நாடு திரும்புவர். புரிதல் அதிகமாவதால் பிறரை அனுசரித்துச் செல்வீர்கள். நண்பர்களை எண்ணி பெருமிதம் அடைவீர்கள்.

கேட்டை: அலுவலகத்தில் உங்களின் அணுகுமுறையில் மாற்றம் செய்வீர்கள். மனதில் புதிய யுக்திகள் தோன்றும். குடும்பத்தினருடன் அன்பாக பேசி மகிழ்வீர்கள். வியாபாரிகளுக்குப் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும்.


தனுசுகுரு, கேது, ராகுவால் நற்பலன்கள் கிடைக்கும். காமாட்சி வழிபாடு சுபிட்சம் தரும்.

மூலம்: சவால்களை கையாள்வது கடினமாக இருக்காது. தொழில் வட்டாரத்தில் சிறந்த தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். முன்னேற்றம் குறித்து சுதந்திரமாக முடிவெடுப்பீர்கள். பணியாளர்கள் உறுதியான மனநிலையில் இருப்பர்.

பூராடம்: உரையாடலின் போது கவனமாக இருங்கள். பயணங்கள் செய்ய வாய்ப்புள்ளது. பாஸ்போர்ட், விசா சம்பந்தமான விஷயங்கள் அலைச்சலுக்கு பிறகே முடியும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

உத்திராடம் 1: சோம்பல் காரணமாக எந்த முயற்சியையும் தள்ளிப்போட வேண்டாம். நல்ல மனிதர்களின் உதவியை நிராகரிக்காதீர்கள். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். பகை பாராட்டியவர் இணைந்து கொள்வர்.


மகரம்செவ்வாய், கேது, சந்திரனால் அதிர்ஷ்டம் உண்டு. கிருஷ்ணர் வழிபாடு முன்னேற்றம் தரும்.

உத்திராடம் 2,3,4: நட்பால் ஆதாயம் உண்டு. உடல் நலம் மேம்படும். மனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் நீங்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். பொருளாதார நெருக்கடியை போக்க செலவை குறைப்பீர்கள்.

திருவோணம்: கூடுதல் வருமானத்துக்கு செய்த முயற்சி தாமதமாகவே பலன் தரும். எங்கும் எதிலும் பொறுமையான அணுகுமுறை கட்டாயம் தேவை. பெண்களுக்கு தந்தையின் அன்பும், ஆதரவும் உண்டு. தைரியம் அதிகரிக்கும்.

அவிட்டம் 1,2: இயந்திரங்களை இயக்கும்போது கவனம் தேவை. குடும்பத்தில் குதுாகலமான சுபபலன்கள் ஏற்படும். உடன்பிறந்தோரிடையே பந்தபாசம் அதிகரிக்கும். பணியாளர்கள் நிலுவைப்பணிகளை முடித்து நிம்மதி அடைவீர்கள்.


கும்பம்சூரியன், சுக்கிரன் சந்தோஷ பலன்களை வழங்குவர். சரபேஸ்வரர் வழிபாடு வளம் தரும்.

அவிட்டம் 3,4: பணியாளர்கள் பேச்சில் எச்சரிக்கையுடன் இருப்பர். மனதில் நிம்மதி கூடும். வீண்பழி ஏற்படுவதில் இருந்து தப்புவீர்கள். தொழிலில் சில புதிய மாற்றங்களை செய்வீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

சதயம்: பிறரால் செய்ய முடியாததை செய்து வியப்பில் ஆழ்த்துவீர்கள். செலவுகளை கட்டுப்படுத்த மிகுந்த முயற்சி தேவைப்படும். நெருங்கிய உறவினரிடம் இருந்து நல்லசெய்தி வந்து சேரும். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

பூரட்டாதி 1,2,3: உங்கள் மீது அக்கறை கொண்டவர்கள் ஆலோசனை தருவர். பெரிய சிரமங்களில் இருந்து தப்புவீர்கள். பிள்ளைகளின் மனம் மகிழும். பெண்களுக்கு மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.மீனம்புதன், சுக்கிரன், சனியால் நன்மை காண்பீர்கள். சூரியன் வழிபாடு ஆரோக்கியம் தரும்.

பூரட்டாதி 4: எதிலும் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். பகை காரணமாக விலகியவர்கள் மீண்டும் வந்து சேரலாம். எதிர்பார்த்த பணம் சரியான நேரத்தில் கிடைக்கும். அடுத்தவர்களின் கஷ்டங்களை புரிந்து கொள்வீர்கள்.

உத்திரட்டாதி: பணி, வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். இளைஞர்களின் கனவுகள் நிறைவேறும். பிறர் கூறும் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கக்கூடும்.

ரேவதி: சகபணியாளர்களால் உங்களின் புகழ் குறைக்கக்கூடும். செலவினங்களில் கவனமாக இருப்பது நல்லது. அக்கம் பக்கத்தினருடன் கலகலப்பாகப் பொழுது போகும். எதிலும் பலமுறை யோசித்த பிறகே முடிவெடுக்கவும்.

சந்திராஷ்டமம்: 8.1.2021 காலை 6:00 - 9.1.2021 காலை 6:06 மணி

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X