சர்வதேச திரைப்பட விழா : 3 இந்திய படங்கள் தேர்வு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சர்வதேச திரைப்பட விழா : 3 இந்திய படங்கள் தேர்வு

Added : ஜன 08, 2021
Share
புதுடில்லி :கோவாவில் நடக்கவுள்ள சர்வதேச திரைப்பட விழாவிற்காக நேற்று வெளியிடப்பட 15 படங்கள் அடங்கிய பட்டியலில் மூன்று இந்திய படங்களும் இடம் பிடித்துள்ளன.ஐ.எப்.எப்.ஐ. எனப்படும் சர்வதேச திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் கோவாவில் நடத்தப்படுகிறது. இதன்படி 51வது ஐ.எப்.எப்.ஐ. விருது வழங்கும் விழா வரும் 16ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது.இந்நிலையில் இந்த ஆண்டிற்கான

புதுடில்லி :கோவாவில் நடக்கவுள்ள சர்வதேச திரைப்பட விழாவிற்காக நேற்று வெளியிடப்பட 15 படங்கள் அடங்கிய பட்டியலில் மூன்று இந்திய படங்களும் இடம் பிடித்துள்ளன.

ஐ.எப்.எப்.ஐ. எனப்படும் சர்வதேச திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் கோவாவில் நடத்தப்படுகிறது. இதன்படி 51வது ஐ.எப்.எப்.ஐ. விருது வழங்கும் விழா வரும் 16ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது.இந்நிலையில் இந்த ஆண்டிற்கான போட்டிக்கு 15 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதற்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதில் மூன்று இந்திய படங்களும் இடம்பிடித்துள்ளன.கிருபால் கலிதாவின் 'பிரிட்ஜ்' படம்; சித்தார் திரிபாதியின் 'ஏ டாக் அண்ட் ஹிஸ் மேன்' மற்றும் கணேஷ் விநாயகனின் 'தேன்' என்ற தமிழ் படமும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.இவற்றை தவிர போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 'தி டொமெய்ன்' படம்; டென்மார்க்கின் 'இன்டூ தி டார்க்னஸ்' திரைப்படம் உள்ளிட்ட 12 படங்கள் இறுதி போட்டிக்கு தேர்வாகி உள்ளன.இதேபோல் சிறந்த நடிகர் நடிகை இயக்குனர் உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X