கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தியேட்டர்களில் 100 சதவீத ரசிகர்களை அனுமதிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

Updated : ஜன 08, 2021 | Added : ஜன 08, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
சென்னை: தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளில் ரசிகர்களை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், 50 சதவீத இருக்கைகளுடன், தியேட்டர்கள் இயங்க அனுமதித்து, 2020 அக்டோபரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது, 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதித்து, ஜன., 4ல் தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை
தியேட்டர்கள், திரையரங்குகள், இருக்கை, உயர்நீதிமன்ற கிளை, மதுரை ஐகோர்ட் கிளை, ஐகோர்ட் கிளை, மதுரை உயர்நீதிமன்ற கிளை, தமிழக அரசு,

சென்னை: தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளில் ரசிகர்களை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், 50 சதவீத இருக்கைகளுடன், தியேட்டர்கள் இயங்க அனுமதித்து, 2020 அக்டோபரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது, 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதித்து, ஜன., 4ல் தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி என்ற நிலை தொடர வேண்டும். 100 சதவீத இருக்கைகளில் ரசிகர்களை அனுமதிக்க முடியாது. பள்ளிகள் திறக்காத நிலையில் ரசிகர்களை அனுமதித்தது எப்படி. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.


பரிசீலனை செய்க


முன்னதாக, 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது.


latest tamil news


இதை விசாரித்த நீதிபதிகள், வரும் 11ம் தேதி வரை தியேட்டர்களில் 50 சதவீத ரசிகர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். 50 சதவீத ரசிகர்களை தமிழக அரசு, நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறோம். கொரோனா காலத்தில் பொருளாதார சிக்கல்களுக்கு நல்ல முடிவு எடுக்க வேண்டும். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், விரிவான அறிக்கை பெற்று தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mrsethuraman - Bangalore,இந்தியா
08-ஜன-202121:40:41 IST Report Abuse
mrsethuraman  விஜய் அண்ணே நம்ம எல்லாருக்கும் 'மாஸ்டர்' நீதி மன்றம் அதை மறந்துடீங்களே.
Rate this:
Cancel
Rajasekaran - Chennai,இந்தியா
08-ஜன-202121:34:34 IST Report Abuse
Rajasekaran வரவேற்கப்படவேண்டிய உத்தரவு . கல்விச்சாலைகளுக்கு இல்லாத முக்கியத்துவம் திரை அரங்குகளுக்கு கொடுத்தல் நேர்மையற்ற செயல். உணவு விடுதிகள் , கல்விக்கூடங்கள் போன்ற பொது இடங்களில் சமூக இடைவெளி கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க இயலும் . அது கூட எவ்வளவு பயன் தரும் என்று கணிக்க முடியாத நிலையில் திரை அரங்குகளை முழு வீச்சில் இயங்க அனுமதிப்பது மீண்டும் நோய்த்தொற்றை அதிகரிக்க வைக்கும் . இவ்வளவு நாட்கள் கடுமையாக இரவு பகல் பாராமல் உழைத்த முன்னிலை வீரர்களின் பணிச்சுமையை இன்னும் அதிகரிக்க வைக்கும் செயல் மனிதாபிமானமற்றது .தமிழக அரசு தயங்காமல் மறுபரிசீலனை செய்து முன்னிருந்த உத்தரவையே கண்டிப்பாக கடைப்பிடிக்க திரைத் துறையினரின் ஒத்துழைப்பை பெற வேண்டும். திரைப்பட ரசிகர்களும் தங்களுக்குள்ள குடும்ப , சமூக உடல் நலம் கருதி திரையரங்குகளுக்கு போகாமல் இருந்து ஓராண்டு காலமாக நம்மை அச்சுறுத்தும் கொடு நோய் இன்னும் வீரியமடையாமல் தடுக்க அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
08-ஜன-202120:15:32 IST Report Abuse
Ramesh Sargam சரியான முடிவு. After all மக்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். நடிகர்களின் வருமானம் அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X