கம்பம் : கம்பம் பகுதி கிராமங்களில் மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு சார்பில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி அடங்கிய வாகனத்தில் சென்று மக்களுக்கு எக்ஸ்ரே எடுத்து வருகின்றனர்.
மாநில காசநோய் தடுப்பு பிரிவில் உள்ள 15 டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி அடங்கிய வாகனங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேனி மாவட்டத்திற்கு வந்துள்ள வாகனத்தில் சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி கிராமங்களில் மக்களுக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மூலம் நெஞ்சக படங்கள் எடுத்தனர்.மாவட்ட காசநோய்தடுப்பு பிரிவின் துணை இயக்குநர் முருகன் கூறுகையில் '' இந்த வாகனம் மூலம் ஒரு நாளைக்கு 200 எக்ஸ்ரே எடுத்து வருகிறோம். படங்கள் மாவட்ட அலுவலக கம்ப்யூட்டரில் பதிவாகும். அங்கு டாக்டர்கள் ஆய்வு செய்து காசநோய் தாக்கியுள்ளவர்களை கண்டறிந்து மாத்திரைகள் வழங்கப்படும்,'' என்றார்.
டாக்டர் முருகானந்தம், சித்தா டாக்டர் சிராசுதீன், காசநோய் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராம்மகேஸ்வரன், விக்னேஷ், மேற்பார்வையாளர்கள் ஆனந்தகுமார், சையதுஅப்தாகீர், தொழில்நுட்ப அலுவலர் விமலா, ரேடியோகிராபர் நாகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE