பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் மழை எதிரொலி; முலாம் பழங்கள் அழுகல்: விவசாயிகள் வேதனை

Added : ஜன 08, 2021
Share
Advertisement
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே மழையால் முலாம் பழங்கள் அழுகின. இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.நாமகிரிப்பேட்டை ஒன்றியம், சிங்கிலியன்கோம்பை பகுதியில், 20க்கும் மேற்பட்ட ஏக்கரில் முலாம் பழம் சாகுபடி செய்துள்ளனர். தற்போது, பூ பூத்து காய் காய்க்க தொடங்கியுள்ளது. சில இடங்களில் காய்கள், ஒரு கிலோ வரை வளர்ந்துள்ளன. கடந்த, சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே மழையால் முலாம் பழங்கள் அழுகின. இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.


நாமகிரிப்பேட்டை ஒன்றியம், சிங்கிலியன்கோம்பை பகுதியில், 20க்கும் மேற்பட்ட ஏக்கரில் முலாம் பழம் சாகுபடி செய்துள்ளனர். தற்போது, பூ பூத்து காய் காய்க்க தொடங்கியுள்ளது. சில இடங்களில் காய்கள், ஒரு கிலோ வரை வளர்ந்துள்ளன. கடந்த, சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வெயில் அடித்தாலும் சில நாட்களில் தண்ணீர் தேங்குவதால், முலாம் பழங்கள் அழுகி வருகின்றன. சிறிய காய்கள் தவிர, பெரும்பாலான காய்கள் வயலிலேயே அழுகிவிட்டன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: தொடர்ந்து, 20நாட்களாக மழை பெய்து வருவதால், வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், காய்கள் முழுவதும் அழுகி விட்டன. ஒரு ஏக்கர் பயிரிட்டு பராமரித்து இந்த நிலைக்கு வர, 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியுள்ளது. அனைத்தும் தற்போதும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X