நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அக்லாம்பட்டி ஏரியை தூர்வார வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., அக்லாம்பட்டி செல்லும் வழியில் உள்ள ஏரி, 15 ஏக்கரில் அமைந்துள்ளது. இதில் தேங்கும் மழைநீரால், 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும், 50க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள், கிணறுகளின் நீர்மட்டம் உயரும். ஆனால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏரியில் கருவேல மரங்கள் முளைத்துள்ளன. இதனால், சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஏரியை தூர்வாரி அதிக மழைநீர் தேங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE