நாமக்கல்: கல்வி, வேலை வாய்ப்பில், வன்னியர்களுக்கு, 20 சதவீதம் இடஒதுக்கீடு கோரி, நாமக்கல் மாவட்ட, பா.ம.க., சார்பில், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட அலுவலகங்களில் மனு அளித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று, பலப்பட்டரை மாரியம்மன் கோவில் அருகே இருந்து அக்கட்சியின் மாநில துணை ?பாதுச் செயலாளர் தினேஷ்பாண்டியன் தலைமையில் ஊர்வலமாக நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு முகப்பு கதவு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் பொன்னம்பலத்திடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.
* குமாரபாளையத்தில், மாநில துணை அமைப்பு செயலர் பழனிவேல் தலைமையில், நகராட்சி பொறியாளர் சுகுமாரிடம் மனு அளித்தனர். வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க., சார்பில் மேற்கு மாவட்ட செயலர் பழனிசாமி தலைமையிலான அணியினர், நகராட்சி ஆணையர் ஸ்டான்லி பாபுவிடம் மனு கொடுத்தனர்.
* திருச்செங்கோட்டில், நகராட்சி கமிஷனர் சையத் முஸ்தபா கமாலிடம் மனு அளித்தனர். மாவட்ட துணை அமைப்பு தலைவர் சுதாகர், மாநில துணை பொது செயலாளர் பொன் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE