கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் துவங்கியது. டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, அவர் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளும், நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு இணையாக, சுயமான இயங்கிட பல்வேறு உதவி உபகரணங்களையும், உதவித்தொகைகளையும், சுயதொழில் செய்ய கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில், கலை நிகழ்ச்சிகள், தெருமுனை நாடகங்கள் நடத்தப்படுவுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார். மாவட்ட மாற்றுதிறனாளிகள் அலுவலர் உலகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE