தமிழ்நாடு

எதிரிகளை ஓடஓட விரட்டியடிக்க வேண்டும்: ஈரோட்டில் முதல்வர் பழனிசாமி பேச்சு

Added : ஜன 08, 2021
Share
Advertisement
ஈரோடு: ''சட்டசபை தேர்தலில் எதிரிகளை ஓடஓட விரட்டியடித்து, தமிழகத்தில் ஒரே கட்சிதான் இனி என்ற நிலையை இளைஞர்கள், இளம்பெண்கள் சிப்பாயாக இருந்து பாடுபட வேண்டும்,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு, தகவல் தொழில் நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. முதல்வர் பழனிசாமி பேசியதாவது: வருங்காலத்தில் நாட்டை, தமிழகத்தை

ஈரோடு: ''சட்டசபை தேர்தலில் எதிரிகளை ஓடஓட விரட்டியடித்து, தமிழகத்தில் ஒரே கட்சிதான் இனி என்ற நிலையை இளைஞர்கள், இளம்பெண்கள் சிப்பாயாக இருந்து பாடுபட வேண்டும்,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.


இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு, தகவல் தொழில் நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. முதல்வர் பழனிசாமி பேசியதாவது: வருங்காலத்தில் நாட்டை, தமிழகத்தை ஆள்பவர்கள் இளைஞர் சமுதாயம். இதன் ஏற்றம், முன்னேற்றத்துக்காக இளைஞர், இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்ப பிரிவை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துவக்கினார். தேர்தல் பிரசாரத்துக்காக பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று வருகிறேன். இதில் இளைஞர் பட்டாளத்தினர் எழுச்சியுடன் உள்ளனர். இதை பார்க்கும்போது, நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், நமது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பதை, இங்குள்ளவர்கள் முகத்தின் துணிவு, வேகம், மலர்ச்சி காட்டுகிறது. கடந்த, 2019ல் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் மூன்று லட்சத்துத்து, 5,000 கோடி முதலீடு, 304 தொழில் நிறுவனங்களிடம் பெறப்பட்டது. இதன் மூலம், 10 லட்சம் பேர் நேரடியாக, மறைமுகமாக வேலை வாய்ப்பு பெறுவர். ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் அறிவிக்கப்படலாம். தேர்தல் என்ற போர்களத்தில் சிப்பாயாக வெற்றி பெற பாடுபட்டு எதிரிகளை ஓடஓட, நீங்கள் விரட்ட வேண்டும். இந்த தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம், தமிழகத்தில் ஒரே கட்சி, அ.தி.மு.க., மட்டும் தான் என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த அரசு பெண்களுககு முழுமையான பாதுகாப்பு அளித்து வருகிறது. பெண்களுக்கு பல்வேறு நல திட்ட உதவிகளை செய்து வருகிறது. உள்ளாட்சி துறையில் பெண்களுக்கு 50- சதவிகித இட ஒதுக்கீடு அளித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், அமைச்சசர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X