சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 20 ஆண்டு; ஈரோடு பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை

Added : ஜன 08, 2021
Share
Advertisement
ஈரோடு: சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், வாலிபருக்கு, 20 ஆண்டு சிறை, ஈரோடு பெண்ணுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து, ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஈரோடு, பழையபாளையம், இந்திரா நகர் வீதியை சேர்ந்த, தனசேகர் மனைவி ரேகா பானு, 32, பியூட்டிஷியனான இவருக்கு, ஏராளமான ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்தது. ஆண் நண்பர்களில் ஒருவரான, ஆந்திரா, சித்தூர் மாவட்டத்தை

ஈரோடு: சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், வாலிபருக்கு, 20 ஆண்டு சிறை, ஈரோடு பெண்ணுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து, ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈரோடு, பழையபாளையம், இந்திரா நகர் வீதியை சேர்ந்த, தனசேகர் மனைவி ரேகா பானு, 32, பியூட்டிஷியனான இவருக்கு, ஏராளமான ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்தது. ஆண் நண்பர்களில் ஒருவரான, ஆந்திரா, சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசலு, 28; இவரிடம் ஈரோட்டை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி., மாணவி ஒருவரை அறிமுகப்படுத்தினார். சிறுமிக்கு திருமண ஆசை காட்டி, ரேகா பானு துணையுடன், 2018 ஏப்.,28ல், கொடிவேரி அணைக்கு சீனிவாசலு அழைத்து சென்றார். பின் சித்தூருக்கு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிந்த, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், குழந்தை திருமண தடை சட்டம், கடத்தல், போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து, 2018 மே,5ல் சீனிவாசலுவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. இதில் நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார். சீனிவாசலுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். சிறுமி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ரேகாபானுவுக்கு, மூன்றாண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் சுமதி ஆஜரானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X