பொது செய்தி

இந்தியா

மாஸ்க் அணிவது கட்டாயம்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
பெங்களூரு: ''கர்நாடகாவில், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றாலும், அது முழுவதுமாக நம்மை விட்டு செல்லவில்லை. ஒவ்வொருவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். இரண்டாம் கட்டமாக மாநிலத்தின், 263 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று நடத்தப்படவுள்ளது,'' என, மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சுதாகர் எச்சரித்தார்.கொரோனா தடுப்பூசி ஒத்திகை குறித்து, உயர்

பெங்களூரு: ''கர்நாடகாவில், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றாலும், அது முழுவதுமாக நம்மை விட்டு செல்லவில்லை. ஒவ்வொருவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். இரண்டாம் கட்டமாக மாநிலத்தின், 263 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று நடத்தப்படவுள்ளது,'' என, மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சுதாகர் எச்சரித்தார்.

கொரோனா தடுப்பூசி ஒத்திகை குறித்து, உயர் அதிகாரிகளுடன், சுகாதார துறை அமைச்சர் சுதாகர், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று ஆலோசனை நடத்தினார்.பின், அவர் கூறியதாவது: நாட்டிலோ அல்லது கர்நாடகாவிலோ, கொரோனா நம்மை விட்டு செல்லவில்லை என்பதை, அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நாளுக்கு நாள் குறைவதால், கொரோனா போய்விட்டது என, சிலர் கருதுகின்றனர். முக கவசம் அணிவதை தவிர்க்கின்றனர். முக கவசம் அணியாவிட்டால், அபாயம் உறுதி.


வேண்டுகோள்


கொரோனா தொற்றுக்கு, இப்போது தான் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை போட்டுக்கொண்டு, வெற்றியடைந்து, கொரோனா போன பின், முக கவசம் அணிவது அவசியமில்லை. முக கவசம் அணிவதில், பிரச்னை என்ன?பிரிட்டனில், நேற்று ஒரே நாளில், 74 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 1,100 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில், கொரோனா குறைகிறது. ஆனால் அனைவரும் விதிமுறையை பின்பற்ற வேண்டும்.

பிரிட்டனிலிருந்து வந்த, பெங்களூரின் 112 பேர் உட்பட, வெவ்வேறு மாவட்டங்களின் ஐந்து பேர், இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்கள் எங்கிருந்தாலும், மருத்துவமனையில் சேர வேண்டும். இவர்களின் பாஸ்போர்ட்கள், வெளிநாட்டில் இருப்பதால், அவர்கள் எங்குள்ளனர் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் ஏற்கனவே, உள்துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். வெவ்வேறு மாநிலங்களில் உள்ளவர்களை, கண்டுபிடிக்கும்படி கோரியுள்ளோம்.

மாநிலத்தின், ஐந்து மாவட்டங்களில், கொரோனா தடுப்பு மருந்து போடும், முதற்கட்ட பரிசோதனை வெற்றிஅடைந்துள்ளது. இன்று முதல், 263 மையங்களில் இரண்டாம் கட்ட ஒத்திகை, மாநிலம் முழுவதும் துவங்குகிறது. இதற்காக, ஆரம்ப சுகாதார மையங்கள், சமுதாய சுகாதார மையங்கள், தாலுகா, மாவட்ட சுகாதார மையங்கள் பயன்படுத்தப்படும். எங்கள் துறை ஊழியர்கள், முன்னேற்பாடு செய்துஉள்ளனர்.


பயிற்சி

தேர்தலில் வாக்காளர்களுக்கு, எப்படி ஓட்டு போட வேண்டும் என்பதை, எப்படி கற்றுத்தருகின்றனரோ, அது போன்று, கொரோனா தடுப்பு மருந்து எப்படி போட வேண்டும் என, சுகாதார அதிகாரிகளுக்கு, வல்லுனர்கள் பயிற்சியளிப்பர். மாநிலத்தில், பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க, அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. சுகாதாரம், குடும்ப நலம், கால்நடை, நகர அபிவிருத்தித்துறை அதிகாரிகள் கூட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X