பொது செய்தி

இந்தியா

புலிகள் வனப்பகுதியில் அரிய வகை பறவைகள்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
சாம்ராஜ்நகர்:சாம்ராஜ்நகர், பி.ஆர்.டி., புலிகள் வனப்பகுதியில், இரண்டு அரிய வகை பறவைகள் தென்பட்டன.சுற்றுலா துறை மற்றும் ஜங்கிள் லாட்ஜ் அண்ட் ரெஸ்டாரன்ட்ஸ் இணைந்து, சாம்ராஜ்நகரின், பி.ஆர்.டி., புலிகள் வனப்பகுதியில், மாநில அளவிலான, ஏழாவது பறவைகள் திருவிழா ஏற்பாடு செய்துள்ளனர்.நேற்று முன்தினம் திருவிழா துவங்கியது. 85 பறவை ஆர்வலர்கள், பதிவு செய்துள்ளனர். தலா, ஆறு பேர் வீதம், 14

சாம்ராஜ்நகர்:சாம்ராஜ்நகர், பி.ஆர்.டி., புலிகள் வனப்பகுதியில், இரண்டு அரிய வகை பறவைகள் தென்பட்டன.

சுற்றுலா துறை மற்றும் ஜங்கிள் லாட்ஜ் அண்ட் ரெஸ்டாரன்ட்ஸ் இணைந்து, சாம்ராஜ்நகரின், பி.ஆர்.டி., புலிகள் வனப்பகுதியில், மாநில அளவிலான, ஏழாவது பறவைகள் திருவிழா ஏற்பாடு செய்துள்ளனர்.நேற்று முன்தினம் திருவிழா துவங்கியது. 85 பறவை ஆர்வலர்கள், பதிவு செய்துள்ளனர். தலா, ஆறு பேர் வீதம், 14 குழுக்கள் அமைக்கப்பட்டு, பறவைகளை படம் பிடித்து வருகின்றனர்.

எலந்துார், கே.குடி, பூதிபடகா ஆகிய வனப்பகுதிகள், நீர் நிலைகள், குன்றுகள் போன்ற இடங்களில் பறவைகளை படம் பிடிக்க, ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

காலை, 6:30 மணியிலிருந்து, பகல், 12:00 மணி வரை; மதியம், 2:30 மணியிலிருந்து, மாலை, 6:00 மணி வரையிலும் பறவைகள் வாழும் இடத்துக்கு செல்கின்றனர். புதிய பறவைகள் ஏதாவது தென்படுகின்றனவா என்று ஆர்வலர்கள் தேடி வருகின்றனர்.

பறவை ஆர்வலர் ஆதர்ஷ் அரஸ் கூறுகையில், ''பறவைகளை தேடி, படம் பிடிப்பதே தனி அனுபவம். அதிக குளிரினால், குறைவான பறவைகள் மட்டுமே காணப்பட்டன. வேறு பகுதியிலிருந்து வந்த, இரண்டு அரிய வகை பறவைகள், என் கேமரா கண்ணில் பட்டது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X