பெங்களூரு: ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கைப்படி, தொகுதி மேம்பாட்டு நிதியாக, எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களுக்கு தலா, 50 லட்சம் ரூபாய் கூடுதலாக வழங்க முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில், தொகுதி மேம்பாட்டு நிதியாக, எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆண்டுதோறும், இரண்டு கோடி ரூபாய் வழங்கப்படுவது வழக்கம். கொரோனாவால், ஏற்பட்ட பொருளாதார சூழ்நிலையால், இந்தாண்டு, ஒரு கோடி ரூபாய் மட்டும் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக, 300 கோடி ரூபாய் அளவுக்கு புதிய திட்டங்கள் தயாரிக்கும்படி மாநில அரசு, சம்பந்தப்பட்டோருக்கு அறிவுறுத்தின.
ஆனால், சமீபத்தில் நடந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், கூடுதல் நிதி வழங்கும்படி, முதல்வர் எடியூரப்பாவிடம் கோரினர். இதன்படி, அனைத்து எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி..,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக, கூடுதலாக, தலா, 50 லட்சம் ரூபாய் வழங்கும்படி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதாவது சபாநாயகர், நியமன உறுப்பினர் உட்பட, 225 எம்.எல்.ஏ.,க்களுக்கும், மேலவை தலைவர் உட்பட, 75 எம்.எல்.சி.,க்களுக்கு, தலா, 50 லட்சம் ரூபாய் வீதம், 150 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. இது குறித்து, நிதித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். நிதித்துறை அதிகாரிகளும், திட்டம் மற்றும் புள்ளியியல் துறைக்கு, திட்ட அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டுள்ளனர்.இதனால், எம்.எல்.ஏ.,க்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கள் கோரிக்கையை, நிறைவேற்றியதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE