பெங்களூரு: மார்க்கெட்களுக்கு, காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால், வெங்காயம், கேரட், பீன்ஸ் உட்பட, பல காய்கறிகளின் விலை, கணிசமாக குறைந்துள்ளது.
கர்நாடகாவில், கடந்தாண்டில், தொடர் மழை, வெள்ளப்பெருக்கால், சில மாதத்துக்கு முன், காய்கறிகள் விளைச்சல் பாழானது. அவ்வேளையில், காய்கறிகள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் வெங்காயம், கேரட், பீன்ஸ் உட்பட பல காய்கறிகளின் விலை, கிலோவுக்கு, 100 ரூபாயை எட்டியது. அதிக விலை கொடுத்தாலும், தரமான காய்கறிகள் கிடைக்கவில்லை.
நவம்பரில், நல்ல மழை பெய்ததால், காய்கறிகள் செழுமையாக விளைந்துள்ளது. பல மாவட்டங்களிலிருந்து, காய்கறிகள் பெங்களூரு வருகிறது. கொரோனா ஊரடங்குக்கு பின், நகரப்பகுதி இளைஞர்கள், கிராமங்களுக்கு சென்று, விவசாயத்தில் ஈடுபட்டனர். மார்க்கெட்டுகளுக்கு, வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் மார்க்கெட்டுகளுக்கு, அவரைக்காய், பட்டாணி, பீன்ஸ், தக்காளி, காலிபிளவர், வெங்காயம், பீட்ரூட், கேரட், கத்தரிக்காய் என, அனைத்து காய்கறிகளும், பெருமளவில் வருவதால், விலை குறைந்துள்ளது. கீரைகளும், கைக்கெட்டும் விலையில் கிடைக்கிறது. பொங்கல் பண்டிகை நெருங்குவதால், வரும் வாரம் காய்கறிகள் விலை அதிகரிக்கலாம் என, வியாபாரிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE