கே.ஐ.ஏ.டி.பி.,க்கு, கர்நாடக உயர்நீதி மன்றம் அபராதம்

Added : ஜன 08, 2021
Share
Advertisement
பெங்களூரு:கையப்படுத்திய நிலத்துக்கு பதிலாக வழங்கிய நிலத்துக்கு, கிரயப்பத்திரம் செய்து கொடுக்காத, கே.ஐ.ஏ.டி.பி.,க்கு, கர்நாடக உயர்நீதி மன்றம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.பெங்களூரு வடக்கு தாலுகாவின், ஜாலா பேரூராட்சிக்கு உட்பட்ட, அரெபின்ன மங்களா கிராமத்தில், 'ஏசிவி இண்டஸ்ட்ரிஸ்' நிறுவனத்துக்கு சொந்தமான, சர்வே எண், 101ல், 6 ஏக்கர்; சர்வே எண், 102ல்; 6 ஏக்கர்

பெங்களூரு:கையப்படுத்திய நிலத்துக்கு பதிலாக வழங்கிய நிலத்துக்கு, கிரயப்பத்திரம் செய்து கொடுக்காத, கே.ஐ.ஏ.டி.பி.,க்கு, கர்நாடக உயர்நீதி மன்றம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

பெங்களூரு வடக்கு தாலுகாவின், ஜாலா பேரூராட்சிக்கு உட்பட்ட, அரெபின்ன மங்களா கிராமத்தில், 'ஏசிவி இண்டஸ்ட்ரிஸ்' நிறுவனத்துக்கு சொந்தமான, சர்வே எண், 101ல், 6 ஏக்கர்; சர்வே எண், 102ல்; 6 ஏக்கர் நிலத்தை, கே.ஐ.ஏ.டி.பி., எனும் கர்நாடக தொழில் பகுதி அபிவிருத்தி ஆணையம், 2008ல், கையகப்படுத்தியது. இதற்கு நிவாரணமாக, அபிவிருத்தி செய்யப்பட்ட, 6 ஏக்கர் நிலத்தை விட்டுக்கொடுப்பதாக, கே.ஐ.ஏ.டி.பி., கூறியிருந்தது. இதன்படி, 6 ஏக்கர் நிலத்தை விட்டுக்கொடுத்தது. ஆனால், கிரயப்பத்திரம் செய்து கொடுக்கவில்லை. பல முறை வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை.

இது தொடர்பாக, கேள்வியெழுப்பி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில், 'ஏசிவி இண்டஸ்ட்ரிஸ்' நிறுவனம், மனு தாக்கல் செய்திருந்தது. விசாரணை நடத்திய நீதிமன்றம், 'நிலம் விட்டுக்கொடுத்த, பல உரிமையாளர்களுக்கு, அபிவிருத்தி செய்த நிலத்தை விட்டுக்கொடுத்து, கிரயப்பத்திரம் செய்து கொடுத்த, கே.ஐ.ஏ.டி.பி., மனுதாரருக்கு, கிரயப்பத்திரம் கொடுக்காமல், பாரபட்சம் செய்துள்ளது. எனவே, மனுதாரருடன், கே.ஐ.ஏ.டி.பி., செய்து கொண்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். மனுதாரருக்கு விற்பனை கிரயப்பத்திரம் கொடுக்க வேண்டும். 'தாமதமாக்கியதற்காக, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இத்தொகையை, மனுதாரருக்கு கொடுக்க வேண்டும்' என, நேற்று முன் தினம் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X