அமெரிக்க கலவரத்தில் இந்திய தேசிய கொடி : ஏந்தி சென்றவர் டிரெண்டிங்கில் பரபரப்பு

Updated : ஜன 08, 2021 | Added : ஜன 08, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
வாஷிங்டன் : அமெரிக்காவில் நடந்த கலவரத்தில் இந்திய கொடியை ஒருவர் ஏந்தி சென்ற விவகாரம் பரபரப்பானது. அவர் யார் என்பது விபரம் தற்போது தெரியவர அவர் டுவிட்டரில் டிரெண்டிங் ஆனார். சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் இதை ஏற்க மறுத்து வருகிறார் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப். இவரின் ஆதரவாளர்கள்,
VincentXavier, ShashiTharoor, USCapitolProtests,

வாஷிங்டன் : அமெரிக்காவில் நடந்த கலவரத்தில் இந்திய கொடியை ஒருவர் ஏந்தி சென்ற விவகாரம் பரபரப்பானது. அவர் யார் என்பது விபரம் தற்போது தெரியவர அவர் டுவிட்டரில் டிரெண்டிங் ஆனார்.

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் இதை ஏற்க மறுத்து வருகிறார் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப். இவரின் ஆதரவாளர்கள், 'கேப்பிடோல்' எனப்படும், பார்லிமென்ட் கட்டடத்தை நேற்று முற்றுகையிட்டு கபளீகரம் செய்தனர். அப்போது நடந்த பயங்கர கலவரத்தில், நான்கு பேர் உயிர் இழந்தனர்; பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுக்க பரபரப்பானது. இந்த செயலுக்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் அமெரிக்க கொடிகளுக்கு மத்தியில் இந்திய தேசிய கொடியை பிடித்து ஒருவர் போராட்டத்தில் பங்கேற்றார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் நேற்று வைரல் ஆனது. மற்றொரு நாட்டு விவகாரத்தில் நம் நாட்டுக்கு என்ன வேலை. இந்த செயலை செய்தது யார் என்பது போன்ற கருத்துக்கள் எழுந்தன. மேலும் இப்படி செய்த நபர் பா.ஜ., ஆதரவாளராகத்தான் இருப்பார். ஏனென்றால் டிரம்ப்பிற்கு ஆதரவாக அமெரிக்காவில் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார் என்றெல்லாம் சுட்டிக்காட்டி நேற்று இந்த விவகாரத்தை சிலர் சமூகவலைதளங்களில் டிரெண்ட் செய்தனர். அதேசமயம் அந்த போராட்டத்தில் நம் நாட்டு தேசிய கொடியை பிடித்து பங்கேற்று ஆர்ப்பாட்டம் செய்தவர் யார் என்ற விபரம் தெரியாமல் இருந்தது.


latest tamil news
இப்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. அந்த நபரின் பெயர் வின்சென்ட சேவியர். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அதோடு டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் கூட.

இந்த போராட்டத்தில் பங்கேற்றது, இந்திய தேசிய கொடியை பிடித்திருந்தது தொடர்பாக டுவிட்டரில் இவர் கூறுகையில், ''அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்ததாக அமெரிக்கர்கள் மட்டுமல்லாது அமெரிக்க தேசபக்தர்களான வியட்நாம், இந்திய, கொரிய மற்றும் ஈரானிய நாட்டை சேர்ந்தவர்களும் நம்புகிறார்கள். எங்கள் உரிமைக்காக, டிரம்பிற்காக ஒற்றுமையுடன் இந்த பேரணியில் இணைந்த அமைதியான எதிர்ப்பாளர்கள்'' என மற்ற நாட்டுக்காரர்களும் போராட்டத்தில் பங்கேற்ற போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''நான் டிரம்ப்பை ஆதரிப்பவன். டிரம்பிற்கு ஆதரவாக இந்தியர்களும் இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டவே அந்த போராட்டத்தில் அமைதியான முறையில் மூவர்ண கொடி உடன் பங்கேற்றேன். ஆனால் அங்கு நிகழ்ந்த வன்முறை சம்பவம் எதிர்பாராத ஒன்று. நான் மட்டுமல்ல என்னுடன் சேர்ந்து இன்னும் சிலரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். பாகிஸ்தானியர்கள் கூட அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்'' என தெரிவித்துள்ளார் வின்சென்ட சேவியர்.


latest tamil news
இவரின் கருத்திற்கு பலரும் எதிர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். நீங்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தினாலும் மற்றொரு நாட்டு விவகாரத்தில் நம் நாட்டு கொடியை வைத்து நீங்கள் போராட்டத்தில் பங்கேற்றது தவறு. நீங்கள் டிரம்ப்பின் ஆதரவாளர் என்றால் நீங்கள் மட்டும் சென்று போராட்டத்தில் பங்கேற்கலாம். அதை யாரும் மறுக்கப்போவது இல்லை. இந்திய கொடியை ஏன் பயன்படுத்த வேண்டும் என பலரும் அவருக்கு எதிரான கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில் வின்சென்ட் சேவியர் டிரெண்ட் ஆனார்.

அதோடு, இவர் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் உடன் இணக்கமாக இருக்கும் போட்டோ ஒன்றும் சமூகவலைதளத்தில் வைலராகி உள்ளது. இதனால் சசி தரூரும் இந்த விவகாரத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார். இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும் என கேரளாவை சேர்ந்த பா.ஜ., மூத்த தலைவர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanivelu Kandasamy - Thiruvananthapuram (Trivandrum),இந்தியா
09-ஜன-202108:52:04 IST Report Abuse
Palanivelu Kandasamy It represents, India also against the election. If the National flag is misused, the Indian Embassy should take action against him and others with him . Do not put photos of him with Shashi Tharoor and link Congress with this insulting action. All I feel is many Indians do not like the defeat of 'Modi's Friend' there. They do not want that to happen.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
09-ஜன-202106:09:14 IST Report Abuse
D.Ambujavalli எந்த கட்சி, மாநிலத்தவர் ஆனாலும், நம் நாட்டுக்கொடியுடன் அவர்களின் உள்நாட்டு பிரசனையில் தலையிடுவது நம் நாட்டு இறையாண்மையை avamathikka செயல்தான்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
09-ஜன-202104:38:21 IST Report Abuse
NicoleThomson இது போன்றதொரு முpடாள்தனமான காரியத்தை வேறு யார் செய்வார்கள் கேரளாக்காரரே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X